Bigg Boss 7 Tamil: வீடு ரெண்டு.. எண்டர்டெய்ன்மெண்ட்டும் ரெண்டு.. அக்.1 முதல் பிக் பாஸ்..
நடிகர் கமல்ஹாசன் இடம்பெறும் ப்ரோமோ வீடியோ ஒன்று விஜய் டிவி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வீடு 2, எண்டெர்டெய்ன்மெண்ட்டும் 2 என கமல் பேசும் ஜாலியான வீடியோவும் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7...
பிக் பிரதர் என ஆங்கில தொலைக்காட்சிகளில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் வெற்றிகரமான தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக வலம் வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்தியாவில் இந்தியில் முதலில் தொடங்கி நடத்தப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி, ஆறு சீசன்களைக் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்ததந்த மொழிகளில் பிரபல முன்னணி நடிகர்கள் தொகுத்து வழங்கி வரும் நிலையில், தமிழில் தனக்கே உரித்தான ஸ்டைலில் மூத்த நட்சத்திரமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்களை முதல் சீசன் முதல் நிகழ்ச்சியுடன் ஒன்ற வைத்து வருகிறார்.
அக்.1 தயாராகுங்க!
தற்போது ஆறு சீசன்களைக் கடந்து ஏழாவது சீசனை பிக் பாஸ் நிகழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த சீசன் பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். முந்தைய ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், அதேபோல் இந்த ஆண்டும் அக்டோபரில் தொடங்கி நடைபெறும் என ரசிகர்கள் தேதியை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
எதிர்பார்த்தது போல் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் தொடக்க தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் கமல்ஹாசன் இடம்பெறும் ப்ரோமோ வீடியோ ஒன்று விஜய் டிவி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வீடு 2, எண்டெர்டெய்ன்மெண்ட்டும் 2 என கமல் பேசும் ரகளையான வீடியோவும் வெளியாகியுள்ளது.
Bigg Boss Tamil Season 7 Grand Launch - அக்டோபர் 1 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. @ikamalhaasan @disneyplusHSTam #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/di3UPo4T8c
— Vijay Television (@vijaytelevision) September 15, 2023
இந்த வீடியோவை இதயங்களைப் பறக்கவிட்டு பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
போட்டியாளர்கள் இவங்க தான்!
முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியல் இணையத்தில் வெளியாகி வந்தது. மொத்தம் 16 பேர் பிக் பாஸ் வீட்டுக்கு இந்த முறை செல்ல உள்ளதாகவும், அதில் ஏழு பேர் பெயர்கள் உறுதியாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பிரபல நடிகர் பப்ளு எனும் பிருத்விராஜ், பாரதி கண்ணம்மா ரோஷினி, குக்கு வித் கோமாளி புகழ் ரவீனா தாஹா, தர்ஷா குப்தா, பயில்வான் ரங்கநாதன், கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா என பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

