Orange Alert Chennai: மக்களே உஷார்.. அடித்து வெளுக்கப்போகும் மழை.. இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்..
தமிழ்நாட்டிலுள்ள கடலோர மாவட்டங்களுக்கு, வானிலை மையம் நாளை மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு எதிரொலியாக கன மழைக்கு வாய்ப்புள்ளதால், தமிழ்நாட்டிலுள்ள கடலோர மாவட்டங்களுக்கு, வானிலை மையம் நாளை மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டிற்கு மழை வாய்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு நிற குறியீடு எச்சரிக்கை உள்ளதால், நாளை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வரும் 4 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவைக்கான கன மழை எச்சரிக்கை pic.twitter.com/oFPrw7S3EQ
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 9, 2022
வரும் 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.





















