TN Rain Alert: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெங்கு தெரியுமா?
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இன்றைய வானிலை
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று (ஜூன்.12) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் நாள்கள்
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 12, 2022
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (ஜூன்.13) தொடங்கி நான்கு நாள்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 12, 2022
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்யக்கூடும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும் நாளையும் லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோரப் பகுதிகள், வடக்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே பலத்த காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்