மசாஜ் சென்டர் மோசடி: தோழியுடன் சேர்ந்து நகை பறிப்பு, தந்தைக்கு சிறை தண்டனை.. நடந்தது என்ன?
சூளைமேடு பகுதியில் மசாஜ் செய்வதாக அழைத்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் பறிப்பு

மசாஜ் சென்டரில் தோழியை அறிமுகப்படுத்திய பெண்
சென்னை ஓட்டேரி வள்ளுவன் சாலை பகுதியில் வசித்து வரும் சார்லஸ் ( வயது 50 ) என்பவர் வழக்கமாக செல்லும் மசாஜ் சென்டிரில் அறிமுகமான ஆண்ட்ரியா என்ற பெண் , தனது தோழி ரேகா என்பவர் தங்களுக்கு நன்றாக மசாஜ் செய்வதாக கூறி ரேகாவின் முகவரி மற்றும் செல்போனை கொடுத்ததின் பேரில் , சார்லஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்த ரேகா மற்றும் 2 ஆண்கள் சார்லஸை அவதூறாக பேசி கையால் தாக்கி மயக்கமடைய வைத்து , அவரிடமிருந்து 20 சவரன் எடை கொண்ட தங்கச் சங்கிலி , கைச்சங்கிலி (Bracelet), 1 கைக் கடிகாரம் மற்றும் G-pay மூலம் ரூ.40,000/- பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து சார்லஸ் F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட ரேகா சாவித்திரி ( வயது 60 ) மற்றும் அவரது பேரன் நவீன்குமார் ( வயது 23 ) ஆகிய இருவரை தென்காசி மாவட்டம் , செங்கோட்டையில் வைத்து கைது செய்து , நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.2,85,000/- பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நகைகளை பறிக்க திட்டம்
விசாரணையில் ஆன்ட்ரியா என்ற பெண் புகார்தாரர் அடிக்கடி தொடர்பில் இருந்ததாகவும் , மாற்று இளம் நபர்களை கேட்டதன் பேரில் , ஆன்ட்ரியா மற்ற நபர்களுடன் சேர்ந்து புகார் தாரரின் நகைகளை பறிக்க திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
மேற்கண்ட பாலியல் இச்சை குறித்தான விவரம் தெரிந்தால் புகார் கொடுக்க மாட்டார்கள் என சம்பவத்தை நிகழ்த்தியது தெரிய வந்தது. F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, தலை மறைவு எதிரிகளின் விவரங்கள் பெற்று தொடர்ந்து கண்காணித்து, இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களான ஆன்ட்ரியா (எ) நிக்கி (எ) நிக்கோலா ( வயது 38 ) மற்றும் இவரது கணவர் கோகுல கிருஷ்ணன் ( வயது 40) ஆகிய இருவரை கோயம்புத்தூர், மேட்டுப் பாளையத்தில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 114 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை
2022 - ம் ஆண்டு சென்னை கோயம்பேடு காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக , பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் W-33 விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு , நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
இவ்வழக்கு தொடர்பாக W-33 விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரால் விசாரிக்கப்பட்டு இறுதி அறிக்கை தயார் செய்து , திருவள்ளூர் மாவட்ட போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து சம்மந்தப்பட்டவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் , குற்றவாளிக்கு 2 சட்டப் பிரிவுகளில் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதம் எனவும், 2 தண்டனைகளையும் தனித் தனியாக அனுபவிக்க வேண்டும் எனவும் , மொத்தம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 18 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.





















