மேலும் அறிய

சபரிமலைக்கு போறீங்களா... பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை

சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வரும் நிலையில், தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி மற்றும் சிறப்பு பேருந்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள்

கேரளாவில் உள்ள பிரபலமான புனித ஸ்தலம் தான் சபரிமலை ஐயப்பன் கோவில், இங்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கோவில் திறக்கப்படும்.பக்தர்கள் 41 நாட்கள் விரதம் கடைப்பிடித்து சபரிமலைக்கு செல்வார்கள். அந்த வகையில மண்டல பூஜை மற்றும் மகரவிலக்கு உற்சவங்களுக்காக சபரிமலையில் பிரபலமானது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து  லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்லவுள்ளனர். இதனையடுத்து பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்து தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில்,

கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, சபரிமலைக்கு குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும்.எனவே, பயணிகள் தங்கள் பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழுவாக பயணிக்க சிறப்பு பேருந்து

90 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு Online மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC Official app ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த நவம்பர் 11ஆம் தேதி முதல் (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) குளிர்சாதன பேருந்து (AC) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது. 

சபரிமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கம்

இந்நிலையில் மேற்படி இயக்கத்தின் தொடர்ச்சியாக ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கரூர் பகுதி வாழ் மக்கள் பயன்பெறும் வகையில் அதி நவீன குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து வருகிற 28/11/2025 முதல் 16/01/2026 வரை இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2025 முதல் 30.12.2025 மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2025 முதல் 29.12.2025 வரை இச்சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது)

சிறப்பு பேருந்து முன்பதிவிற்கு

மேலும் இந்த வருடம் சபரிமலைக்கு பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதிக்காக அவற்றினை சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Embed widget