Chennai Rains: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள்.. ஆங்காங்கே விழும் சாரல், மழை..!
சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் கருமேகங்கள் சூழ்ந்து, சாரலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னை நகரம் முழுவதும் காலையிலேயே கருமேகங்கள் சூழ்ந்து, ஆங்காங்கே தூரல் மற்றும் மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் கருமேகங்கள் சூழ்ந்து, சாரலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தற்போது சென்னை எம்.ஆர்.சி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா, பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று ஓரிரு மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.