ஒரு பக்கம் கடன்... மறுபக்கம் மகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் மோகம்... ஏடிஎம் கொள்ளை முயற்சியில் வெளிவந்த உண்மை!
அவரது பெண் குழந்தை தற்போது அரசு பள்ளியில் படித்து வருகிறார். அவரை அடுத்த வருடம் ஆங்கிலம் பேசும் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று விரும்பியுள்ளார்.
சேத்துப்பட்டு 16வது அவென்யூவில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் 4 நாட்கள் முன்பு மர்ம நபர் பணம் எடுப்பதுபோல் ஏடிஎம் இயந்திரத்தை இரும்பு ராடால் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் உடைப்பதாக ஹைதரபாத்தில் உள்ள தலைமையக கட்டுப்பாட்டு அறையில் அலாரம் ஒலித்துள்ளது. அவர்கள் அளித்த புகாரின் பேரில், தகவலறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். போலீசார் வந்து பார்த்தபோது, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் அவர் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. அங்கிருந்த சிசிடிவி பதிவு மூலம் இதுதொடர்பாக அன்னை சத்தியா நகரை சேர்ந்த ரஞ்சித்குமார்(28) என்பவரை பிடித்தனர். விசாரணையில், இவர் சென்னை மாநகராட்சி 9வது மண்டலத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருவது தெரியவந்தது. அவர் முன்னதாக மைலாப்பூர் பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். தற்போது ஒரு வாரமாக கோடம்பாக்கம் பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
போலீசார் தெரிவித்த தகவல்கள் படி, ரஞ்சித் குமார் என்னும் நபர் அன்னை சத்யா காலனியில் வசித்து வருகிறார். இவர் மாநகராட்சி குப்பை சேகரிப்பு வண்டி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு ஐந்து வயதில் ஒரு பெண்ணும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அவரது பெண் குழந்தை தற்போது அரசு பள்ளியில் படித்து வருகிறார். அவரை அடுத்த வருடம் ஆங்கிலம் பேசும் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று விரும்பியுள்ளார். மேலும், தனக்கு ரூ.5 லட்சம் கடன் இருந்த நிலையில், தனது மனைவியுடன் குடித்தனம் செல்ல தனது மாமியார் தொடர்ந்து வலிறுத்தியுள்ளார். இதனால் பணம் அதிகம் தேவைப்பட்டுள்ளது. பலரிடம் கடன் கேட்டும் பணம் கிடைக்கவில்லை என்பதால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.5 லட்சம் கடனை கட்டிவிட்டு தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இவர் இந்த திருட்டில் ஈடுபட துவங்கும் முன் செவ்வாய் கிழமை அதிகாலை மூன்று மணி அளவில் வள்ளுவர் கோட்டம் அருகே சென்று கொண்டிருக்கையில் அவரது துப்புரவு வண்டியின் ஜிபிஎஸ்-ஐ துநபிதுவிட்டு தன் சீருடையை மாற்றிக்கொண்டு, ஏடிஎம் சென்றதாக கீழ்ப்பாக்கம் டிசிபி கே.கார்த்திகேயன் கூறியுள்ளார். வங்கியில் சிசிடிவி கேமரா இருந்ததால் வெளியில் துப்புரவு வாகன பளிச்சிடும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு நின்றுகொண்டிருப்பது தெரியவந்துள்ளது, இரவில் வாகனம் தெரிவதாக ஒட்டப்படும் அந்த ஸ்டிக்கர் இரவு நேரத்தில் சிசிடிவி கேமராவில் பதிந்ததால் எளிதில் குற்றவாளியை கண்டுபிடித்தனர். இந்த திருட்டில் ஈடுபடுவதற்கு முன்தினம் அவர் ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்காக நேர்காணல் சென்றுவந்து வேலைக்காக காத்திருந்திருக்கிறார். திருடுவதற்காக கட்டுமானங்களை உடைத்ததற்காக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் கஸ்டடியில் வைத்துள்ளனர்.