மேலும் அறிய
காஞ்சிபுரம் கொரோனா தொற்று எண்ணிக்கை 67; இரண்டு பேர் இறப்பு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 67 ஆனது. தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.

காஞ்சிபுரம் மருத்துவமனை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைய துவங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200-ஆக இருந்தது. ஊரடங்கும் எதிரொலியாக தற்போது கணிசமாக குறைந்தது நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67. கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 2, குணமடைந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 57 . தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 704 .
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு குணமடைந்து வீடு திரும்புபவர்களின் தற்போது படுக்கைகள் காலியாக உள்ளன. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70409 ஆக பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் தொடர் கண்காணிப்பு மற்றும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர் குடும்பத்தை சார்ந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளால் தற்போது வைரஸ் தொற்றின் வேகம் குறைந்து வருகிறது.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படுகைகள் காலியாக உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் தங்களுடைய நலன் மற்றும் அனைவரின் நலன் கருதி முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட அரசு கூறும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion