மேலும் அறிய

TET Correction: டெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்: டிஆர்பி அறிவிப்பு

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜூலை 11 முதல் 16ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜூலை 11 முதல் 16ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜூலை 11 முதல் 16ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''2022ஆம்‌ ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணைய தளம்‌ வாயிலாக 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம்‌ 26.04.2022 வரை வழங்கப்பட்டது. மேலும்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள்‌ 1-க்கு 2,30,878 பேரும்‌ மற்றும்‌ தாள்‌ 2-க்கு 4,01,886 பேரும்‌ மொத்தமாக 6,32,764 பேர்‌ விண்ணப்பித்துள்ளனர்‌.

மேலும்‌ விண்ணப்பதாரர்கள்‌ தங்களது விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள்‌ இவ்வலுவலகத்திற்கு பெறப்பட்டு வருகிறது. ஆகையால்‌ விண்ணப்பதாரர்களின்‌ கோரிக்கையினை ஏற்று, ஆரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள்‌ 1 மற்றும்‌ தாள்‌ 2க்கு விண்ணப்பித்தவர்கள்‌ தங்களின்‌ விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள விரும்பினால்‌ 11.07.2022 முதல் ‌16.07.2022 வரை திருத்தம்‌ செய்ய ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌ இனிவரும்‌ காலங்களில்‌ திருத்தம்‌ தொடர்பாக
எவ்வித கோரிக்கைகளும்‌ பரிசீலனை செய்யப்பட மாட்டாது'' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TET Correction: டெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்: டிஆர்பி அறிவிப்பு

தேர்வு முறை

மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக் காலம் 3 மணி நேரம். 

மொழிப் பாடத்துக்கு தமிழ்/ தெலுங்கு / மலையாளம் / கன்னடம் / உருது என ஏதேனும் ஒரு மொழியில் இருந்து 30 கேள்விகள் கேட்கப்படும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தலில் இருந்து (Child Development and Pedagogy)  30 கேள்விகளும் ஆங்கிலம், கணிதம் மற்றும் சூழல் அறிவியலில் இருந்து தலா 30 கேள்விகளும் கேட்கப்படும். 

இரண்டாம் தாளில்,  குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தலில் இருந்து 30 கேள்விகளும் மொழிப் பாடங்களில் இருந்து தலா 30 கேள்விகளும் கேட்கப்படும். மீதமுள்ள 60 கேள்விகள், குறிப்பிட்ட ஆசிரியர் பணியிடம் சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து கேட்கப்படும்.

தேர்வு மையங்கள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அறிவிக்கப்படும். அதுகுறித்த விவரங்கள் ஹால்டிக்கெட்டில் பின்னர் தெரிவிக்கப்படும்.

தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள். அவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Embed widget