Tejas Express : நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது..! தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! தகவல் உள்ளே..!
முதல் முறையாக தாம்பரம் ரயில்நிலையத்தில் இன்று முதல் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் மத்திய அமைச்சர் எல் முருகன் மற்றும் டி ஆர் பாலு கொடியை அசைத்து துவக்கி வைத்தனர்
முதல் முறையாக தாம்பரம் ரயில்நிலையத்தில் இன்று முதல் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் மத்திய அமைச்சர் எல் முருகன் மற்றும் டி ஆர் பாலு கொடியை அசைத்து துவக்கி வைத்தனர்.
நீண்ட நாள் கோரிக்கை
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தேஜஸ் அதி விரைவு ரயில் தொடங்கப்பட்டது. இந்த ரயிலானது சென்னை புறநகரில் வழியாகச் சென்று, திருச்சி சந்திப்பில் மட்டுமே நின்று செல்லும் , ஆனால் பயணிகள் நீண்ட கோரிக்கையான தாம்பரம் சந்திப்பில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய ரயில்வே துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். அதை ஏற்று மத்திய ரயில்வே துறை இன்று முதல் தேஜ ஸ்ரீ அதிவிரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நிகராக கருதப்படுவது தாம்பரம் ரயில் நிலையம். இங்கிருந்து அதிகளவில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் மிகவும் அதிகமாக உள்ளனர் . இன்று முதல் தேஜஸ் அதிவிரைவு ரயில் இன்று முதல் நின்று செல்லும் தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாகவே கருதுகின்றனர்
வியாழக்கிழமை மட்டும் இயங்காது
சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த தேஜா ஸ்ரீ அதிவிரைவு ரயில் சென்னை புறநகர் வழியாக திருச்சி சந்திப்புக்கு 10.15 மணி அளவில் மதுரைக்கு 12 .15 மணியளவில் சென்றடைகிறது. மாலை 3 மணி அளவில் மதுரையில் இருந்து புறப்படும் தேஜஸ்ரீ அதிவிரைவு ரயில் சரியாக 9 .15 மணி அளவில் எழும்பூர் நிலையத்திற்கு வந்தடைகிறது. வாரத்தில் சுழற்சி முறையாக ஆறு நாட்கள் மட்டுமே இங்கபடுகிறது. வியாழக்கிழமை அன்று மட்டுமே இயங்காது என தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் நாளான இன்று மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறையினை அமைச்சர் எல்.முருகன், டி ஆர் பாலு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தாம்பரம் எம்எல்ஏ எஸ் ஆர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.