”அண்ணாமலை குறித்து செல்வப்பெருந்தகை சர்ச்சைக்குரிய கருத்து” என்ன பேசினார் தெரியுமா..?
வாஜ்பாய் உயர்த்தி பேசிய இந்திரா காந்தியை குறித்து பேசுவதற்கு நரேந்திர மோடிக்கு கூட தகுதி இல்லை, நேற்று முளைத்த காளான் அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வசந்தகுமார் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை, வசந்தகுமாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை ;
தொடர்ந்து தமிழக அரசை ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறது, நியாயமான விதத்தில் நிதியும் ஒதுக்கவில்லை பல துறைகள் அதற்கு சாட்சியாக இருக்கிறது, தமிழகத்தை பழிவாங்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது, இதை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக காண்பிக்கிறது.
பிச்சை எடுத்து மத்திய அரசுக்கு அனுப்புகிறோம்
ரயில்வே துறையில் ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சார்ந்த மாவட்ட வட்டார தலைவர்கள் எல்லாம் மக்களிடம் கையேந்தி ஒரு ரூபாய் கூடுதலாக போட்டு ஆயிரத்து ஒரு ரூபாயை ரயில்வே துறைக்கு திருப்பி அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.
ரயில்வே அமைச்சரின் வங்கி கணக்குக்கு ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் தவனாகிய இந்திய ரயில்வே துறைக்கு அனுப்பும் போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னெடுத்திருக்கிறது.
தேர்தல் வரை பெட்ரோல் டீசல் எரிவாயு விலையை ஏற்றாமல் தேர்தலுக்காக வைத்திருந்தது, இப்பொழுது அனைத்து விலைகளையும் ஏற்றி விட்டது சுங்கச்சாவடிகளில் ஐந்து முதல் ஏழு விழுக்காடுகள் கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள் இதை காங்கிரஸ் காட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான கோடி செலவில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை ஆறு மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் நொறுங்கி விழுந்திருக்கிறது இதுதான் மோடி அரசின் ஒன்றிய அரசின் இலட்சணம்.
ஊழல்,மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது , அதானிக்கு கடன் தள்ளுபடி, சலுகை, யார் தொழில் பண்ணாலும் தொழிலை பிடுங்கி அவரிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் சிறை பிடிக்க வேண்டும் இதுதான் 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆட்சி . இதுவரை சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்தது குறித்து ஒன்றிய அரசிடமிருந்தோ மாநில அரசிடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை. ஒன்றிய அரசு உலகத் தலைவர்களின் பெருமையை சிதைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி நடக்கும்போது கலைஞர் ஆட்சி நடக்கும் போது ஏராளமான சிலைகள் நிறுவப்பட்டு இருக்கிறது. இன்று வரை எத்தனை சுனாமி வந்தாலும், எவ்வளவு பெரிய அலைகள், கடல் சீற்றம் வந்தாலும் ஐயன் திருவள்ளுவர் சிலை வானுயர்ந்து நின்று கொண்டிருக்கிறது. இதுதான் ஒன்றிய மோடி அரசிற்கும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
கங்கானா ரணாவத் விவசாயிகளை குறித்து பேசியதை குறித்து இதுவரையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, விவசாயிளின் போராட்டத்தை குறித்து இழிவாக பேசி உள்ளார், இது பாஜகவுடன் குரல் இல்லை பாஜக செய்தி இல்லை என்றால், வேளாண் விவசாய மக்களே இழிவுபடுத்தி பேசிய ரங்கநாத் ராவத் மீது என் நடவடிக்கை எடுக்கவில்லை?
2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடல் தாமரை மாநாடு என்று பாஜகவால் தீர்மானம் ஏற்பட்டது, பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கள் கூட தாக்கப்பட மாட்டார்கள், பாதுகாப்பாக மீனவர்கள் இருப்பார்கள் என கூறி ஆட்சிக்கு வந்த பிறகு, இப்பொழுது மீனவர்களின் உயிர்ப்பலிகளும் இலங்கை அரசாங்கம் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, வெளியுறவு துறையின் செயல் படுதோல்வி அடைந்துள்ளது, குஜராத் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒன்றிய அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறியுள்ளது என்றார்.
மேலும் அதிமுக பாஜக மோதல் குறித்து பேசிய செல்வப் பெருந்தகை
நேற்று வரை அவர்கள் பங்காளிகளாக கூட்டணியில் இருந்தார்கள் ஒருவருக்கு ஒருவர் இருக்கும் ரகசியமானவர்கள்தான் தெரியும், அவர்களது காங்கிரஸ் பேரியக்கம் தலையிட விரும்பவில்லை.
அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்தவர் இந்திரா காந்தி என அண்ணாமலை பேசியதற்கு,* இந்திரா காந்தி குறித்து எதை வேண்டுமானாலும் பேசலாம் மக்கள் எல்லாத்தையும் கேட்பார்கள் என்று அண்ணாமலை நினைத்திருக்கலாம், அவர்களைப் பற்றி பேசுவதற்கு பாஜக நரேந்திர மோடிக்கு கூட எந்த தகுதியும் கிடையாது, நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் அன்னை இந்திரா காந்தி பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை, இந்திரா காந்தி இரும்பு பெண்மணி என துர்கா தேவி என வாஜ்பாயே பாராட்டினார். இதையெல்லாம் அண்ணாமலை முதலில் படிக்க வேண்டும். அரைவேக்காட்டுத்தனமாக இந்திரா காந்தியை குறித்து பேசுவதற்கும் தலைவர் ராஜீவ் காந்தியை குறித்து பேசுவதற்கும் அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது.
பாஜக வாக இருந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுத அனுமதித்து இருப்பார்களா? எமர்ஜென்சி ஏன் கொண்டுவரப்பட்டது என்று பல விளக்கங்கள் இருக்கிறது. இந்திரா காந்தி நாட்டு மக்களிடம் வெளிப்படையாக வருத்தத்தை தெரிவித்தார். தவறு நடந்தால் நாட்டு மக்களிடம் வெளிப்படையாக பேசுவது தான் தலைவர்கள். பாஜக தலைவர் ஏதாவது ஒரு தவறை ஒப்புக்கொள்வாரா மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா இதுதான் பாஜகவின் கலாச்சாரம் காங்கிரசின் கலாச்சாரம்.
குஜராத் மீனவர்களை கைது செய்தால் உடனே அழைத்து வருவார்கள் தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்தார் வேடிக்கை பார்ப்பார்கள்.
விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக இதுவரை தமிழ்நாட்டில் பார்முலா போர் நடைபெற்றது இல்லை. புதுமையாக இளைஞர்களுக்கும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் விதமாக நிதிநிலை நிதி ஆதாரம் தமிழ்நாட்டின் நிலை என அரசுக்கு தான் தெரியும் அரசு நடத்தக்கூடியதில் மூக்கை நுழைக்க விரும்பவில்லை என என்றார்.