மேலும் அறிய
Advertisement
Poovulagin Nanbargal : பழைய நிலக்கரி மின்னுற்பத்திக்கு டாட்டா சொல்லுங்க.. 4000 கோடி லாபம் பாருங்க.. ஆய்வறிக்கையில் தகவல்
மாசற்ற மின்னாற்றலை உற்பத்தி செய்யும் வகையில் அவற்றை மாற்றியமைப்பதன் மூலம், தமிழ்நாடு ₹4000 கோடி வரையில் லாபம் அடையலாம் என்று க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான் என்கிற அமைப்பு மேற்கொண்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பழைய நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்களில் மின்னுற்பத்தியை நிறுத்திவிட்டு அக்கட்டமைப்பை, மாசற்ற மின்னாற்றலை உற்பத்தி செய்யும் வகையில் மாற்றியமைப்பதன் மூலம் மாநிலத்தின் மின்சார உற்பத்திக் கட்டமைப்பை ஒரு நிலைத்தன்மைக்குக் கொண்டு வர முடியும் எனவும், மேலும் ₹4000 கோடி வரை இதனால் லாபம் உண்டாகும் என்றும் க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான் அமைப்பு மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கின்றது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் முனைவர் கிரீஷ் ஸ்ரீமலி மற்றும் முனைவர் அபினவ் ஜிண்டால் தமிழ்நாட்டில் உள்ள 3990MW உற்பத்தித் திறன் கொண்ட பழைய நிலக்கரி சார் அனல் மின்நிலையங்களை [தூத்துக்குடி I,II & III (1050 MW), மேட்டூர் I & II (840 MW), வட சென்னை stage I (630 MW) & நெய்வேலி II stage I (1470 MW)] நிறுத்துவதில் உள்ள செலவுகளையும், லாபங்களையும் இந்த ஆய்வின் மூலம் அளவிட்டுள்ளனர்.
இந்த அனல்மின் நிலையங்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள வாழ்நாளையும் தாண்டி அல்லது இறுதி கட்டத்திலும், செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உற்பத்தியாகும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை அதிகமாக இருப்பதுடன், நிலக்கரி விநியோகத்திற்காக மிகவும் நீண்ட விநியோகத் தொடர்களை நம்பியுள்ளன. அண்மையில் நிலக்கரி விநியோகத்தில் ஏற்பட்ட பிர்ச்சனைகளால் உண்டான மின்சார உற்பத்தி பாதிப்பு இந்த விநியோகத் தொடர் எவ்வளவு எளிதாக பாதிப்புக்குள்ளாகக் கூடியது என்பதை உணர்த்துகிறது.
35,000 கோடி சேமிப்பு
சிஆர்எச்-ன் முந்தைய ஆய்வில் இப்பழைய அனல்மின் நிலையங்களை நிறுத்துவதாலும், அவற்றை புதிய, மலிவான புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்கு மாற்றுவதன் மூலமும் குறைந்த விலையில் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்பதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ₹35,000 கோடி வரை சேமிக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது. “இந்த அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி முறை மாற்றியமைக்கப்பட்டால், அவற்றை செயலிழக்கச் செய்வதற்கு ஆகும் செலவினை விட 2-3 மடங்கு அதிக லாபத்தை ஈட்டுவதோடு புதிய சூரிய மின் தகடு, மின்சல சேமிப்பு ஆகியவற்றை வாங்குவதற்கு தேவைப்படும் முதலையும் ஈட்டமுடியும் என்பதை எங்கள் ஆய்வு எடுத்துரைக்கின்றது” என்கிறார்'
இந்த ஆய்வை மேற்கொண்ட முனைவர் கிரீஷ். மேற்குறிப்பிட்டுள்ள 4 அனல்மின் நிலையங்களை மொத்தமாக செயலிழக்கம் செய்வதற்கு ₹1,300 கோடி செலவாகும் நிலையில், அவற்றை சூரிய மின் ஆற்றல் உற்பத்தி நிலையமாக மாற்றியமைப்பதால் ₹2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலன் கிடைக்கும். மேலும் பழைய அனல்மின் நிலையத்தின் டர்போஜெனரேட்டரை மின் தேக்கியாக பயன்படுத்தினால் ₹4000 கோடி வரை பலன் கிடைக்கும் என ஆய்வு தெரிவிக்கின்றது.
மலிவான வகையில் மின்சாரம்
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் நிலங்களையும், மின் தொகுப்பு கட்டமைப்புகளையும் உபயோகிப்பதன் மூலம், மின்சார உற்பத்தியின் செலவு பெரிதளவு குறையும். இது மின்சாரத்தின் விலையை, ஒரு யூனிட்டுக்கு ₹1.42 (சூரிய மின்னுற்பத்தி) மற்றும் ₹2.33 (மின்கல சேமிப்புடன் கூடிய சூரிய மின்னுற்பத்தி) ஆக குறைக்கும். இது TANGEDCO வை மிக மலிவான வழியில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவும். “தமிழ்நாட்டின் எரிசக்தி உற்பத்தி மற்றும் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, விலையுயர்ந்த, வழக்கற்றுப் போன நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலயங்களை கைவிடுவது அவசியமாகிறது. நிலக்கரி மின்னுற்பத்தி ஆலைகளால் ஏற்படும் காற்று, நீர் மாசு அதிகமாகி வருவதையும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு நீண்ட காலத் தீர்வுகள் குறித்து சிந்திக்க வேண்டும்” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சார்ந்த சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் மின்வாரியம், பழைய விலைமிகுந்த அனல்மின் நிலையங்களை மூடுவது பற்றியும், அதன் மின்னுற்பத்தி முறைகளை மாற்றம் செய்வது பற்றியும் சிந்திக்க வேண்டும். இது தமிழ்நாட்டின் நிதி நலனையும், சூழல் நலனையும் மேம்படுத்தவும் மின்சார துறையில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார் க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான் அமைப்பின் தலைவர் திரு ஆஷிஷ் ஃபெர்னான்டஸ்.
பழைய அனல்மின் நிலையங்கள், அவற்றிற்கான நிலக்கரி சாம்பல் குட்டைகளுக்கான இடங்களில் சூரிய மின்தகடு மற்றும் மின்கலங்களை பயன்படுத்துவதன் மூலம், 348 மெகாவாட் சூரிய ஆற்றல் மற்றும் 36 மெகாவாட்மெகாவாட்/ 4 மணிநேர மின்கல சேமிப்புத் திறனை அடையலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion