Rain Holiday: தமிழகத்தில் நாளைக்கும் மழை இருக்கு...! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்கா? - காத்திருக்கும் மாணவர்கள்
தொடர் மழை பெய்து வரும் நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை தமிழகத்தில் டெல்டா மாவட்டம் உட்பட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வானிலை நிலவரம்:
தமிழ்நாட்டில், கடந்த மாதம் அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கி வட கிழக்கு பருவமழையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நவம்பர் 7-ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை 8 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நிலவரம்:
சென்னையில் பகல் பொழுதில் வெயில் அடித்து வந்த நிலையில், மாலை திடீரென மழை பெய்தது. சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை மழையானது விட்டு விட்டு பெய்து வந்தது. இதையடுத்து, மாலை வரை வெயில் அடித்தது. ஆனால், சென்னையில் பகல் பொழுதில் வெயில் அடித்து வந்த நிலையில், மாலை திடீரென மழை பெய்தது.
சென்னையில் ஆயிரம் விளக்கு, நந்தனம், எழும்பூர், விமானநிலையம், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூரி, கொடுங்கையூர், முகப்பேர், அயனாவரம், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், சோழிங்க நல்லூர், பல்லாவரம், தாம்பரம், ஓ.எம்.ஆர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
விடுமுறை?:
தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
View this post on Instagram
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இன்று இரவு பெய்துவரும் மழை நிலவரத்தை பொறுத்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நாளை காலை அறிவிக்க வாய்ப்புள்ளது.