
School Leave : தொடரும் கனமழை.. சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கன மழை எதிரொலியால் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட்:
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகன மழைக்கு வாய்ப்புள்ளதால் வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 10 காலை 8 :30 மணி முதல் நவம்பர் 11 காலை 8 :30 மணி வரை பெய்த சராசரி பகுதி மழைப்பொழிவு
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 11, 2022
Mean Areal precipitation from SAsiaFFGS operated by India Meteorological Department pic.twitter.com/jCe5mOpqVs
நாளை வானிலை நிலவரம்:
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

