1st T20I - 26 Jun 2021, Sat up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
2nd T20I - 27 Jun 2021, Sun up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada

'இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்!

கருணைக்கொலை செய்யுமாறு மன உளைச்சலில் பேஸ்புக்கில் பதிவிட்ட மருத்துவரை சுகாதாரத்துறை அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்

FOLLOW US: 

முதல்வன் படத்தில் வரும் ஒருநாள் முதல்வர் அர்ஜூன் பரபரவென பல நடவடிக்கைகளை எடுப்பார். போன் செய்வார், சாமானியனிடம் பேசுவார், ஊழல் அதிகாரிகளை நீக்குவார். பரபரப்பாக ஏ ஆர் ரகுமான் பிஜிஎம் போட விறுவிறுப்பாக காட்சிகள் ஓட பார்க்கும் நாம் சிலுர்த்து போய் சில்லறையை வீசாத குறையில் அமர்ந்திருப்போம். ஆனால் இதெல்லாம் சினிமாவின் தானே சாத்தியம் என்ற ரியாலிட்டி ஒருபக்கம் மண்டையில் ஓடிக்கொண்டே இருக்கும்.  ஆனால் இன்றைய காலக்கட்டம் சினிமாக்காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு நிஜத்தை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சோஷியல் மீடியா. என்ன? குழப்புகிறீர்கள் என்று கேட்கிறீர்களா? சங்கதி இருக்கிறது. இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்!

மருத்துவர் பிரபு மனோகரன் என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை ஷேர் செய்கிறார். அதில் இடம் மாறுதல் கலந்தாய்வு குறித்த அவரது துயரம் தெரிகிறது. இடம் மாறுதலுக்கான கலந்தாய்வில் அவரது பெயர் விடுபடுவதும் அதற்காக அவர் அலைந்து திரிவதுமாக இருந்துள்ளார்.  கலந்தாய்வால் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவர் ‘இதற்கு மேல் என்னால் முடியாது என்னை கருணைக்கொலை செய்து விடுங்கள்’ என்றும் வலியை பதிவு செய்துள்ளார். விரக்தியின் உச்சியில் கருணைக்கொலை என்ற வார்த்தையை ஒரு மருத்துவரே உச்சரித்து பதிவிட்டது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பலர் சோக எமொஜியை அழுத்தினர், சிலர் கமெண்டுகளில் ஆறுதல் கூறினர்.அதில் ஒரு கமெண்டாக வந்து விழுந்தது மருத்துவரும் திமுக எம்.எல்.ஏ.வுமான எழிலனின் வார்த்தைகள். 'தோழர் வாட்ஸ் அப் பண்ணுங்க'. 

ஒரு மருத்துவரின் குமுறல், அரசின் ஒரு அங்கமான எம்.எல்.ஏ. காதுக்கு சென்றது. அடுத்த ஒரு மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு வருகிறது தொலைபேசி அழைப்பு. பேசியது சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். பிரச்னையை கேட்டறிந்த அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறார். ஒரு கருணைக்கொலைக்கான விரக்தி பதிவு அரசின் காதுகளுக்கு சென்று முடிவுக்கு வருகிறது. எல்லாமே சில மணி நேரங்களில். இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்!

உரிய பதில் வந்ததால் விரக்தி பதிவை நீக்கிய மருத்துவர், அரசுக்கு நன்றிதெரிவித்து பதிவிடுகிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் அரசை நினைத்து நெகிழ்ந்துபோவதாக குறிப்பிடுகிறார். இப்போது அவரது பதிவுக்கு இதய எமோஜிகள் பறக்கின்றன. கமெண்டுகளில் வாழ்த்துகள் குவிகின்றன. முதல்வன் பட காட்சியைப் போலவே பேஸ்புக்கில் நடந்து முடிந்த இந்த பரபரப்பும், சம்பவமும் அரசின் துரித நடவடிக்கை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேவேளையில் இதுதான் சோஷியல் மீடியாவின் வெற்றி. 

சோஷியல் மீடியாவால் பல அதிரடிகள் நிகழ்வதல்ல இன்று மட்டுமல்ல, கடந்த ஆட்சியில் கொரோனா நேரத்தில் ட்விட்டரில் கேட்கப்பட்ட உதவிகளுக்கு நேரடியாக பதிலளித்து கெத்து காட்டினார் எடப்பாடி பழனிசாமி. மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் கணக்கு மூலம் எத்தனையோ வெளிநாட்டு இந்தியர்களின் கைகளை பற்றியுள்ளார். பிரச்னைகளை அரசின் காதுகளுக்கு எளிதாக கொண்டு செல்ல முடிவதும், அதனை தீர்த்துவிட மக்களுக்கான அரசு  தயாராக இருப்பதும் நல்லாட்சியின் அறிகுறி. இது சோஷியல் மீடியாவோடு நின்றுவிடாமல், துயரம் பாடும் கடைகோடி குரலுக்கும் அரசு துரிதம் காட்டும் நிலை வந்துவிட்டால் தினம் தினம் முதல்வன் படக்காட்சி ஓடுக்கொண்டே இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.

புதுச்சேரி : சுதந்திர தினத்துக்குள்ள தடுப்பூசி போட்டுக்கணும்! - துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தல்

Tags: social media ma. subramanian minister Ma. Subramanian ma.su

தொடர்புடைய செய்திகள்

சரக்கு லாரி-பைக் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

சரக்கு லாரி-பைக் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

‛மகன் வாயில் கை விட்டு இதயத்தை பிடுங்க நினைத்த தாய்’ ஆரணி சிறுவன் கொலையில் ‛திடுக்’!

‛மகன் வாயில் கை விட்டு இதயத்தை பிடுங்க நினைத்த தாய்’ ஆரணி சிறுவன் கொலையில் ‛திடுக்’!

புதிய காதலால் ஆத்திரம் : சிறப்பு ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பழைய காதலி..!

புதிய காதலால் ஆத்திரம் : சிறப்பு ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பழைய காதலி..!

வேலூரில் இன்று பதிவானது 95 புதிய தொற்று : சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 229..!

வேலூரில் இன்று பதிவானது 95 புதிய தொற்று : சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 229..!

மாநகராட்சி மயானத்தில் வீடு போன்று கட்டப்பட்டுள்ள கல்லறை : பொதுமக்கள் குற்றச்சாட்டு..!

மாநகராட்சி மயானத்தில் வீடு போன்று கட்டப்பட்டுள்ள கல்லறை : பொதுமக்கள் குற்றச்சாட்டு..!

டாப் நியூஸ்

Stalin advise to Ministers: ‛உஷாரா பதில் சொல்லுங்க...’ எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அட்வைஸ்!

Stalin advise to Ministers: ‛உஷாரா பதில் சொல்லுங்க...’ எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அட்வைஸ்!

Thalapathy 65 First Look Poster: விஜய் 65 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்: மாஸ் ’BEAST'

Thalapathy 65 First Look Poster:  விஜய் 65 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்:  மாஸ் ’BEAST'

Thalapathy 65 First Look: ‛எக்ஸ்-மென் வொல்வரைன் கெட்டப்பில் நடிகர் விஜய்!’ - ‛பீஸ்ட்’ திரைப்படம் என்ன ஸ்பெஷல்

Thalapathy 65 First Look: ‛எக்ஸ்-மென் வொல்வரைன் கெட்டப்பில் நடிகர் விஜய்!’ - ‛பீஸ்ட்’ திரைப்படம் என்ன ஸ்பெஷல்

H Raja on Sekarbabu: அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகவாதி; எச்.ராஜா புகழாரம்!

H Raja on Sekarbabu: அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகவாதி;  எச்.ராஜா புகழாரம்!