மேலும் அறிய

காந்தி மண்டப பராமரிப்பு பணிகள்.. தமிழ்நாடு அரசு அளித்த விளக்கம்

Kamaraj Memorial: செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்திருந்த நிலையில்,  சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

காமராஜர் நினைவிடம் பராமரிப்பின்றி இடுகாடு போன்று இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்து இருந்தார். இந்நிலையில், காந்தி மண்டப வளாகத்தில் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளதாவது,

காந்தி மண்டப வளாகம்:

சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகமானது சுமார் 18.42 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தேசத் தலைவர்களின் நினைவிடங்கள் மற்றும் சிலைகள் நிறுவப்பட்டு, பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் நினைவிடம், பெருந்தலைவர் காமராஜர் சிலை, பெரியவர் எம்.பக்தவச்சலம் நினைவிடம், இரட்டைமலை சீனிவாசன் நினைவிடம், காந்தி மண்டபம் நூலகம் மற்றும் அருங்காட்சியகம், தியாகிகள் மணிமண்டபம், இராஜாஜி நினைவிடம் நூலகம் மற்றும் அருங்காட்சியகம், மொழிப்போர்த் தியாகிகள் மணிமண்டபம், அண்ணல் காந்தியடிகள் சிலை, தியாகி சங்கரலிங்கனார் சிலை, செண்பகராமன் சிலை, ஆர்யா (எ) பாஷ்யம் சிலை மற்றும் திறந்தவெளி கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 

நிதி ஒதுக்கீடு: 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், காந்தி மண்டப வளாகத்தினை பார்வையிட்டு மணிமண்டபங்களும், தேசத் தலைவர்களின் திருவுருவ சிலைகளும் அமையப் பெற்றுள்ள இந்த வளாகத்தினை மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், இவ்வளாகத்தினை பலமுறை பார்வையிட்டு முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மராமத்துப் பணிகளை பொதுப்பணித் துறையின் மூலமாக மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 2022-ஆம் நிதியாண்டில் 1 கோடியே 48 இலட்சம் ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மண்டபங்களை புதுப்பித்தல், நடைபாதைகளை மேம்படுத்துதல், மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.

2022 – 23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் இவ்வளாகத்தில் ரூ.18.00 இலட்சம் செலவில், வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலையும், ரூ.34.00 இலட்சம் செலவில் மருது சகோதரர்கள் சிலையும், ரூ.43.43 இலட்சம் செலவில் வ.உ.சிதம்பரனார் சிலை மற்றும் செக்கு மண்டபம் சீரமைத்தல், ரூ.17.50 இலட்சம் செலவில் சுப்புராயன் சிலை, ரூ.148.12 இலட்சம் செலவிலும், 2 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் அயோத்திதாச பண்டிதர் புதிய மணிமண்டபமும் திறந்து வைக்கப்பட்டது. 

காந்தி மண்டப பராமரிப்பு பணிகள்.. தமிழ்நாடு அரசு அளித்த விளக்கம்

நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்:

மேலும், காமராஜர் நினைவிட கட்டடத்தின் முகப்பு சீரமைத்தல், வர்ணம் பூசுதல் மற்றும் இதர சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. காந்தி மண்டப வளாகத்தினை சீரமைக்கும் வகையில், பொதுப்பணித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர்களால் 8.5.2024 அன்று கள ஆய்வு செய்யப்பட்டு, பின்வரும் மேம்பாட்டுப் பணிகளை பொதுப்பணித் துறையின் மூலம் உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

காந்தி மண்டப பராமரிப்பு பணிகள்.. தமிழ்நாடு அரசு அளித்த விளக்கம்

ஆண்டுதோறும் பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளை தவிர, பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இந்த வளாகத்திற்கு கூடுதலாக குடிநீர் வசதி, சிறப்பு மராமத்துப் பணிகளான சேதமடைந்த நடைபாதை சீரமைத்தல், பூங்காக்களுக்கு தண்ணீர் வசதி, மின் மோட்டார் சீரமைத்தல், வளாகம் முழுவதும் சுத்தம்படுத்தும் பணி, தண்ணீர் சேமிப்பு தொட்டி அமைத்தல், புல்வெளி மற்றும் பூங்கா பராமரிப்பு, நுழைவு வாயில் மற்றும் பெயர் பலகைகளை சீரமைத்தல் மற்றும் புதிதாக குப்பை சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், வெளிப்புற மின் விளக்கு, மின் பெட்டிகள் மற்றும் மின் புதைவழி கேபிள் சீரமைத்தல், புதிய மின் கோபுர விளக்குகள், புதைவழி கேபிள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
Embed widget