மேலும் அறிய
Advertisement
அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்..! தேதியை அறிவித்த டி.ஆர் பாலு..!
"அவதூறு தகவல் வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 8ம் தேதி வழக்கு தொடுக்கப்படும் என பேட்டி "
சென்னையை அடுத்த பம்மலில், திமுக செயல்வீரர்கள் கூட்டம் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்,
அப்போது பேசிய டி.ஆர்.பாலு எம்பி கூறுகையில் :-
திமுக தலைவர் மிகபெரிய சவால்களை சந்தித்துகொண்டு மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை முறைப்படி யாருக்கும் அச்சப்படாமல் பணி செய்து வருகிறார் என்றார். அதுபோல், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு துவக்கமாக அரசு சார்பில் 1000 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை, மதுரையில் மிக பெரிய நூலகம், அழகிய கலை நயத்துடன் கூடிய மணிமண்டபம் என பல்வேறு தொடர் நிகழ்சிகளுடன் நூற்றாண்டு துவங்கி ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
10 ஆயிரம் கோடிகளை சம்பாதித்துள்ளதாக தன் மீது அவதூறு தகவல் வெளியானது தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட தகவல் வெப்சைட்டில் உள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளளாம், அதனை விடுத்து கூடுதலாக ஒரு செண்ட் இடம் கூட இல்லை, சூடு சுரணை மானம் ரோஷம் இருந்தால் களத்தில் சந்திக்க வேண்டும். 8 ஆம் தேதி சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது:- பாஜக தலைவர் அண்ணாமலை என்னை பற்றி தகவல் வெளியிட்டதற்கு முதலில் 48 மணிநேரம் கெடு கொடுத்து நோட்டீஸ் வழங்கினோம் பதில் இல்லை 8ம் தேதி சைதாப்பேட்டை நிதிமன்றத்தில் முதலில் கிரிமினல் வழக்கும், அதனை தொடர்ந்து சிவில் வழக்கும் தொடுக்கவுள்ளதாகவும், தன் மீதி வெளியிட்ட அவதூறு செய்தியில் 21 நிறுவனங்களில் குறிப்பிட்டுள்ளனர், 3 நிறுவனங்களில் மட்டும் முன்பு வாங்கிய ஷேர்கள் உள்ளது எதிலும் தலைமை பொருப்பில் இல்லை என்றார், வெப்சைட் தகவல்களை வைத்துகொண்டு வன்மத்துடன் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளதகவும் , நான் திறந்த புத்தகமாக உள்ளேன் என்மீது சேற்றை வாரி இறைத்துள்ளார். அவர் பெரிய அரசில் பிரமுகர் இல்லை என்றாலும் அவர்சாந்த தேசிய கட்சி என்பதால் விளக்கம் அளித்துள்ளேன் மக்கள் முன்பாக தெரிவித்துள்ளேன் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion