மேலும் அறிய
Advertisement
கொளுத்தும் வெயில்: சுற்றுலாவுக்கு பறக்கும் மக்கள்! விமான நிலையத்தில் நிரம்பி வழியும் கூட்டம்!
சென்னை விமான நிலையத்தில், கோடைகால விமான போக்குவரத்து கால அட்டவணை செயல்பட தொடங்கியுள்ளது.
கோடை விடுமுறை
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அதை போல் பள்ளிகள், கல்லூரிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறையும் விடப்பட்டுள்ளது. மேலும் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களில் பலர், குழந்தைகளுடன் வெளியூர் சுற்றுலாக்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை, வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டு கோடை விடுமுறையின் போதும், இதை போல் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதும், பயணிகள் வசதிக்காக கூடுதல் விமான சேவைகள் இயக்குவதும் வழக்கமாக நடந்து வருகிறது. அதைப்போல் இந்த ஆண்டு கோடை விடுமுறையை, பயணிகள் சந்தோஷமாக கழிப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில், கோடைகால விமான போக்குவரத்து கால அட்டவணை செயல்பட தொடங்கியுள்ளது.
சென்னை- தூத்துக்குடிக்கு, இதுவரை 3 புறப்பாடு விமானங்கள், 3 வருகை விமானங்கள், 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 4 புறப்பாடு, 4 வருகை என்று 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதைப்போல் திருச்சிக்கு இதுவரை,4 புறப்பாடு, 4 வருகை, 8 விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 6 புறப்பாடு, 6 வருகை என்று 12 விமானங்கள் நாளொன்றுக்கு இயக்கப்படுகின்றன. கோவைக்கு இதுவரை தினமும் 6 புறப்பாடு, 6 வருகை விமானங்கள், 12 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 8 புறப்பாடு விமானங்கள், 8 வருகை விமானங்கள், 16 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மதுரைக்கு இதுவரையில் 5 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் 10 விமானங்கள், இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போது 7 புறப்பாடு விமானங்கள், 7 வருகை விமானங்கள், 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதைப்போல் அண்டை மாநிலங்களான பெங்களூருக்கு இதுவரையில் நாள் ஒன்றுக்கு, 8 புறப்பாடு விமானங்கள், 8 வருகை விமானங்கள், 16 விமானங்கள் இயக்கப்பட்டன. இப்போது 11 புறப்பாடு விமானங்கள், 11 வருகை விமானங்கள் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஹைதராபாத்துக்கு இதுவரை 10 புறப்படு விமானங்கள், 10 வருகை விமானங்கள் 20 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போது 14 புறப்பாடு விமானங்கள், 14 வருகை விமானங்கள், 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் விமானம்
இதைப்போல் டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும், கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை- துர்காப்பூர் இடையே, புதிதாக வாரத்தில் 3 நாட்கள், நேரடி விமான சேவைகள், வரும் மே 16 ஆம் தேதி முதல் தொடங்கப்படுகின்றன. அதைப்போல் சென்னை- பாரீஸ்-சென்னை இடையே, ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம், இதுவரையில் வாரத்திற்கு 3 நாட்கள், விமான சேவைகளை இயக்கி வந்தது. ஆனால் இந்த கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இனிமேல் வாரத்திற்கு 5 நாட்கள், இந்த விமான சேவை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்குக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மே 15 ஆம் தேதியில் இருந்து, நேரடி விமான சேவையை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதை போல் சிறந்த சுற்றுலா தளமான மொரிசியஸ் தீவுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த ஏர் மொரிசியஸ் பயணிகள் விமானம், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் ஓட தொடங்கியுள்ளன.
ஒன்றரை லட்சம் பயணிகள்
இவைகள் தவிர சிங்கப்பூர், மலேசியா, லண்டன் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது. இதைப்போல் இந்த கோடை ஸ்பெஷல் விமானங்களாக, சென்னை விமான நிலையத்தில் மொத்தம் சுமார் 40 -க்கும் மேற்பட்ட கூடுதல் மற்றும் புதிய விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த தகவல், கோடை வெப்பத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு, குளுமையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்தில்,கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில், பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 18,90,638. ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 17,42,607. சுமார் ஒன்றரை லட்சம் பயணிகள், கடந்த 2022 ஆம் ஆண்டை விட, 2023 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு சுமார் 3 லட்சம் வரை அதிகரித்து, இந்த ஆண்டு மே மாதத்தில், சுமார் 21 லட்சம் பயணிகள் பயணிக்க வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இட நெருக்கடி ஏற்படவில்லை
அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 11,405. ஆனால் 2023 ஆம் ஆண்டு மே மாதம் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 11,708. விமானங்களில் எண்ணிக்கை கடந்த 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு மே மாதம் 303 விமானங்கள் அதிகமாக இயக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் சுமார் 400 விமானங்கள் வரை அதிகமாக இயக்குவதற்கு, வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க, வெளியூர் செல்லும் பயணிகள் இடையே, உற்சாகம் ஏற்பட்டு உள்ளது. அதோடு கூடுதல் விமானங்கள் அதிகமாக இயக்கப்படுவதால், விமானங்களில் இட நெருக்கடியும் ஏற்படவில்லை, அதைப்போல் அதிக அளவில், கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படவில்லை. இது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion