மேலும் அறிய
Advertisement
மாநில அளவில் நடந்த போட்டி! மோசமாக நடத்தப்பட்டார்களா விளையாட்டு வீரர்கள்? நடந்தது என்ன?
Kanchipuram : முதல் நாள் முதல் சுற்றில் ஆண்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது இரவு 11 மணி வரையிலும் நீடித்ததால் விளையாட்டு வீரர்கள் உண்ண உணவின்றியும் உறங்க இடம் இன்றியும் மைதானத்தில் அமைந்துள்ள சாலையில் படுத்து உறங்கினர்.
மழைநீர் கால்வாய் மீது உறங்கும் விளையாட்டு வீரர்கள்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் மாநில அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டி காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. முறையான வசதிகள் எதுவும் இன்றி இரவு முதலே மழை நீர் செல்லக்கூடிய கால்வாயில் மீது உறங்கி விளையாட்டு வீரர்கள் இல்லாத காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் இருந்து இரு தினங்களுக்கு முன்பே நடைபெறும் மாநில அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற வீரர்கள் வந்துள்ளனர். முதல் நாள் முதல் சுற்றில் ஆண்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது இரவு 11 மணி வரையிலும் நீடித்ததால் விளையாட்டு வீரர்கள் உண்ண உணவின்றியும் உறங்க இடம் இன்றியும் மைதானத்தில் அமைந்துள்ள சாலையில் படுத்து உறங்கினர்.
அதேபோல் முறையாக குடிநீர் வசதி கூட ஏற்பாடு செய்யப்படாமல் ஏதோ ஒரு டபராவின் குடிநீர் குடித்து வைத்திருந்ததாகவும் வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். தண்ணீர் கூட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்காமல் முறையான எந்தவித வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை என மக்கள் குமரினர்
இரண்டாம் சுற்றில் பெண்களுக்கான போட்டி நடைபெற உள்ளதால் மேலும் நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் எனவே தங்க வசதி உணவு கழிப்பிட வசதி ஆகியவற்றை செய்தி தர வேண்டும் என விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதுகுறித்து மாநில அளவிலான நடத்தப்படும் போட்டியின் மாவட்ட உடற்கல்வி ஆசிரியரை கேட்டதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion