நடிகை ஜோதிகாவின் க்ளாசிக் க்ளிக்ஸ்!
தமிழ் சினிமாவில் நடிகை ஜோதிகாவிற்கு ரசிகர் பட்டாளம் தனியே உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஜோதிகா, சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, மகன், மகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்.
பொன்மகள் வந்தாள், நாச்சியார், மகளிர் மட்டும், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல் தி கோர்' மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் 'ஷைத்தான்' படத்திலும் நடித்திருந்தார்.
இந்தியில் ஜோதிகா நடித்துள்ள ' Dabba Cartel' என்ற வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது.
’Dabba Cartel' - வெப் சீரிஸின் புரோமோசன் ஸ்டில்சை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் ஜோதிகாவின் இளமை பற்றி சமூக வலைதளங்களில் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.