மேலும் அறிய
Advertisement
Top News | சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள்
’’திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது’’
1. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து இரு வாரம் கடந்த நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் துவங்கியுள்ளன.
2. நாடு முழுதும், நவம்பர் மாதம் 4ஆம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 51 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3. கிராம ஊராட்சிகளில் பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவா்களது கணவரோ அல்லது உறவினா்களோ செயல்படுவது தெரியவந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.
4. ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் என்றாலே பாலின தொழில் புரியும் இடம்தான் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
5. தெலங்கானா மாநிலத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புடைய 18 கிலோ கஞ்சா பாா்சல்களை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலிலேயே போட்டுவிட்டு தலைமறைவான கடத்தல் ஆசாமிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனா்.
6. மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகக் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7. செல்போன் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதாகக் கூறி, 13 லட்சம் மோசடி செய்த கும்பலை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
8. சேத்துப்பட்டில் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரை கொலை செய்த வழக்கில், ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
9. திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
10. வடகிழக்குப் பருவமழையையொட்டி, சென்னையில் மழைநீர் வெளியேறும் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion