மேலும் அறிய

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: விரிவான விசாரணை செய்யப்படும் - காவல்துறை

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை செய்யப்படும்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில்  வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள்  புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர்.  

அவை சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி  தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் மீண்டும் நடத்த தமிழக அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கடந்த 2016 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமார் என்கிற நபரை காவல்துறை கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களின் மகள் சுவாதி இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி சுவாதியின் தாய் ரங்கநாயகி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி கொலை செய்யப்பட்டார். எனவே ரயில்வே நிர்வாகம் தரப்பில் இழப்பீடாக 3 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது ரயில்வே துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது என்றும், சுவாதி கொலை திட்டமிட்ட சம்பவம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு. இழப்பீடு கோரி சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்திய நீதிபதி, இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து வழக்குகளை இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்:  அப்படி என்ன பேசினார்.?
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்: அப்படி என்ன பேசினார்.?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Embed widget