மேலும் அறிய

G20 FWG: சென்னையில் இன்று நடைபெறும் ஜி-20 பணிக்குழு கூட்டத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை!

சென்னையில் இன்று (24.03.2023) தொடங்கும் ஜி-20 பணிக்குழு கூட்டத்தில் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது

சென்னையில் இன்று (24.03.2023) தொடங்கும் ஜி-20 பணிக்குழு கூட்டத்தில் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு ஜி-20 மாநாடு இந்தியாவின் தலைமையில் டெல்லியில் வரும் செப்டம்பர்,9-10 தேதிகளில் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் இது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

நிதி தொடர்பான கட்டமைப்பு பணிக்குழு கூட்டம்

இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் இரண்டாவது  நிதி தொடர்பான கட்டமைப்பு பணிக்குழு கூட்டம்  சென்னையில் நாளை (24.03.2023) மற்றும் நாளை மறுநாள் (25.03.2023) நடைபெறுகிறது. 

இதற்கு மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் மற்றும் இங்கிலாந்து நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகிய இருவரும் இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் 20 உறுப்புநாடுகள், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள நாடுகள், பல்வேறு சர்வதேச மற்றும் மண்டல அமைப்புகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து ஆலோசனை

ஜி-20  பணிக்குழுக் கூட்டமானது மேக்ரோ பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவின் 2023, ஜி20 தலைமைத்துவமானது,  உணவு, எரிசக்தி, பாதுகாப்பின்மை, பருவநிலை மாற்றம், நிதிப்பரிமாற்ற பாதைகள் போன்றவைகள் மீது இந்தக் குழு அதிக கவனம் செலுத்தும். சென்னையில் நடைபெற உள்ள ஜி-20 கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டத்தில் மேற்கூறிய பிரச்சனைகள் சம்பந்தமாக உறுப்பினர்கள் தங்களது கொள்கை முடிவு சார்ந்த அனுபவங்களை எடுத்துரைப்பர். ஜி20 கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை வரும் ஏப்ரல் 12, 13 தேதிகளில் வாஷிங்டனனில்  ஜி-20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் தெரியப்படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஜி-20 கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டத்திற்கு முன்னேற்பாட்டு நடவடிக்கையின் கீழ், மார்ச் 16 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் ஜி-20 விவாதங்களை முழுமையாக்கி, மக்கள் நலன் சார்ந்த வகையில் ஏற்படுத்தி வருகிறது.  நிகழ்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஜி20 நாடுகளுக்கு இந்தியாவின் தலைமைத்துவம் 2023 –ல் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கான சிறப்பு கவனத்தின் பிரதிபலிப்புகள் என்ற தலைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் உரையாற்றுகிறார்.

ஜி-20 கட்டமைப்புப் பணிக்குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக பருவ நிலை மாறுபாடு மீதான மேக்ரோ பொருளாதாரத்தின்  தாக்கங்கள்  மற்றும் நிதி பரிமாற்ற  பாதைகள் என்ற தலைப்பில்  நாளை மறுநாள்( மார்ச் 25-ஆம் தேதி) விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதம், சிஓபி 28-க்கு தலைமை வகிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின்  ஒருங்கிணைப்புடன் நடத்தப்படுகிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுடன், சூரிய சக்தி ஆற்றலை அதிகரிக்கப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்ற வகையில் சூரிய சக்தி ஆற்றலுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட உள்ளது. உணவு, ஆற்றல் பாதுகாப்பு, வானிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. சிறு, குறு தொழில்களின் நீடித்த வளர்ச்சி குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget