மேலும் அறிய

கோவை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விதித்த கட்டுப்பாடுகளை மாற்றியமைக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு  கட்டுப்பாடுகள் விதித்த உத்தரவை மாற்றியமைக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் கோவை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு  கட்டுப்பாடுகள் விதித்த உத்தரவை மாற்றியமைக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை - பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கோரி யானைகள் நல ஆர்வலரான எஸ்.பி.சொக்கலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் 2019ஆம் ஆண்டு உத்தரவை முறையாக அமல்படுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடை உத்தரவால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. - பி.எல்.சுந்தரமும், ஈரோட்டை சேர்ந்த கண்ணையன் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கும், 16.2 டன்னுக்கும் மேல் எடையுள்ள வாகனங்களுக்கும் எப்போதும் அனுமதி இல்லை என உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரி சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பிறப்பித்த இரு அறிவிப்பாணைகளில் எந்த எடையும் குறிப்பிடப்படவில்லை எனவும், பதிவுச்சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள எடைக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்ல கூடாது என்று மட்டுமே உத்தரவிட்டுள்ளதால், உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணிக்க வேண்டும் எனவும், இந்த சாலை வழியாக செல்வதாக இருந்தால் 130 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணித்தால் போதுமானது எனவும் வாதிடப்பட்டது. கூடுதல் தூரம் பயணிப்பதாக இருந்தால் அதற்கு ஏற்ப கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் இந்த கட்டுப்பாடுகளால் லாரி உரிமையாளர்களுக்கு என்ன பாதிப்பு உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நமது தேவையை பூர்த்தி செய்ய சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்படுகிறோம் என வேதனை தெரிவித்தனர்.

மேலும்,  நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், நீர்நிலைகள், வனங்கள் நிறைந்த தமிழகத்தின் பெருமையை பலி கொடுக்க முடியாது எனவும், தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை ஸ்விட்சர்லாந்து போல அழகானது எனத் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget