மேலும் அறிய

''வெயிட் பண்ணுங்க.. இன்னொரு பாடி வரட்டும்'' - அமரர் ஊர்தியின் அலட்சிய பதிலால் 8 மணி நேரம் காத்திருந்த உடல்

வார்டில் இறந்து கிடந்த சின்னபாப்பாவை சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக அகற்றாமல் வார்டியேலே விட்டுள்ளனர். உறவினர்கள் மற்றும் வார்டில் உள்ள நோயாளிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சின்னபாப்பாவின் உடல் பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றியுள்ளனர்.

காலையில் இறந்தவர் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல அமரர் ஊர்தி இல்லாமல், 8 மணி நேரத்திற்கு பிறகு உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் பகுதியை சேர்ந்தவர் சின்னபாப்பா(60) . இவர் கடந்த 3 தினங்களுக்கு முன் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் இன்று (22.05.2021) காலை அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்நிலையில் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல உறவினர்கள் அரசு அமரர் ஊர்தியை பதிவு செய்த நிலையில் 8 மணி நேரம் ஆகியும் அமர் ஊர்தி வராததால் , இறந்தவரின் சடலத்தை வார்டில் வைத்து கொண்டு அவதிப்பட்டுள்ளனர்.


'வெயிட் பண்ணுங்க.. இன்னொரு பாடி வரட்டும்'' - அமரர் ஊர்தியின் அலட்சிய பதிலால் 8 மணி நேரம் காத்திருந்த உடல்

மேலும் வார்டில் இறந்து கிடந்த சின்னபாப்பாவை சுமார் 7 மணி நேரத்திற்க்கு மேலாக அகற்றாமல் வார்டிலேயே விட்டுள்ளனர். உறவினர்கள் மற்றும் வார்டில் உள்ள நோயாளிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சின்னபாப்பாவின் உடல் பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் பருகூர் வரை ஒரே உடலை எடுத்த செல்ல முடியாது இன்னோரு உடல் இருந்தால் தான் பருகூர் போக முடியும்  என அமரர் ஊர்தி ஓட்டுனரும், நிர்வாகத்தினரும் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். காலை முதல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தங்களை  அலைக்கழித்துவருவதாக உறவினர்கள் குற்றச்சாட்டி மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதனையடுத்து சுமார் 8 மணி நேரத்திற்கு பின்னர் அரசு அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு உடல் பருகூர் அனுப்பிவைக்கப்பட்டது.

'வெயிட் பண்ணுங்க.. இன்னொரு பாடி வரட்டும்'' - அமரர் ஊர்தியின் அலட்சிய பதிலால் 8 மணி நேரம் காத்திருந்த உடல்

இது குறித்து அரசு அமரர் ஊர்திகளின் பொறுப்பாளர் வெங்கடேஷை தொடர்பு கொண்டு கேட்ட போது, ’’அதிக இறப்பு காரணமாக அமரர் ஊர்தி வாகனங்கள் வெளியில் சென்றுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. போதிய வாகனம் இல்லாததாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன பற்றாக்குறையால் அதிக தூரம் ஒரே உடலை கொண்டு செல்லும் போது வழியில் மற்றோரு உடலையும் கொண்டு செல்வது தாங்கள் கடைபிடிக்கும் சாதாரண நடைமுறை தான் என்றும் விளக்கம் கூறினார். சம்பவம் நடக்கும் பொழுது மருத்துவமனை வளாகத்தில் அமரர் ஊர்தி எதுவும் இல்லை என்றும்   வாகனம் வந்த உடனே அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள வேலையில் , இறந்தவரின் உடலை 7  மணி நேரத்துக்கும் மேலாக மற்ற நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டிலே காக்கவைத்த சம்பவம் , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தலைப்பு செய்திகள்

திடீர் வருகை... திகைப்பில் அரசியல் களம்! – ஆகஸ்ட் 8-ல் தமிழகம், புதுச்சேரிக்கு வருகிறார் அமித் ஷா!
திடீர் வருகை... திகைப்பில் அரசியல் களம்! – ஆகஸ்ட் 8-ல் தமிழகம், புதுச்சேரிக்கு வருகிறார் அமித் ஷா!
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
TN Budget 2026: தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
Tamil Nadu Budget 2026: இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் வெளியான மாஸ் அப்டேட்!
இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் மாஸ் அப்டேட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget