வானவில்லை காட்டிச்சென்ற மழை : மழைக்கவிதைகளை எழுத ஆரம்பித்த சென்னைவாசிகள்!
வெப்ப சலனம் காரணமாக சென்னையில் பெய்த மழையும் வானவில்லும் சென்னைவாசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தலைநகர் சென்னையில் வெப்பசலனம் காரணமாக ஒரு மணிநேரமாக மழை பெய்து.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் எனவும் ஏற்கெனவே சென்னை வானிலை மையம் இன்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கிண்டி, சேப்பாக்கம், தேனாம்பேட்டை, வடபழனி, அசோக்நகர், கோடம்பாக்கம், விருகம்பாக்கம், தி.நகர், வேளச்சேரி, குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
மழை காரணமாக சென்னையில் நிலவிவந்த வெப்பம் விலகி குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது. இன்று மதியத்தில் இருந்தே சென்னையில் மேகக்கூட்டங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மழைக்கு முன்பாக தோன்றிய வானவில்லும் மழைக்கு பின்பாக ஏற்பட்ட குளிர்ச்சியும் சென்னை மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பல வலைதளவாசிகள் மழைக்கவிதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.