மேலும் அறிய

Rain water ; வீடுகளில் மழை நீர் வடிகால் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் ?

வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டங்களின் அமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை காண்போம்

மழை நீர் சேகரிப்பு திட்டம் என்றால் என்ன ?
 
மழை நீர் சேகரிப்பு திட்டம் என்பது பெய்யும் மழைநீரை வீணாக ஓடவிடாமல் சேமித்து , நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் , வறட்சியைத் தடுக்கவும் , மற்றும் அன்றாட உபயோகத்திற்குப் பயன்படுத்தவும் உதவும் ஒரு நிலையான நடைமுறையாகும். இது நகர்ப்புற நீர் பற்றாக் குறைக்குத் தீர்வளிப்பதோடு , மழை வெள்ளத்தைக் குறைக்கவும் உதவுகிறது. 
 
திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ; 
 
1. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல் ,  மழைநீரை நேரடியாக நிலத்திற்குள் செலுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் ஆதாரங்கள் செறிவூட்டப்படுகின்றன. 
 
2. நீர் பற்றாக் குறையை சமாளித்தல் ,  மழைநீர் சேகரிப்பு மூலம் கிடைக்கும் நீரை கோடைகாலத்திலும் , அன்றாட வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம். 
 
3. வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல் , 
மழைநீர் நிலத்தில் தேங்கி வெள்ளத்தை ஏற்படுத்துவதை தடுக்கும். 
 
இது மட்டுமில்லாமல் , சேகரிக்கப்படும் மழைநீரை குடிநீராக அல்லாமல் , கழிப்பறைகள் , சலவை மற்றும் துணி துவைத்தல் போன்ற தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.
 
மேலும் , வறட்சியைத் தடுத்து நீர்வள ஆதாரங்களை ஆதரிக்கிறது , நீர் சுத்திகரிப்புச் செலவைக் குறைக்கிறது , நிலையான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு அணுகுமுறையை அளிக்கிறது. 
 
மழை நீர் சேகரிப்பு கட்டாயம்

தமிழகத்தில் வீடுகள் உள்ளிட்ட அனைத்து வகை கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதிகளை அமைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இதன்படி புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதிகள் அமைக்கப்படுகின்றன. இதனால் புதிய கட்டடங்களில் இது போன்ற வசதிகள் இருந்தால் மட்டுமே பணி நிறைவு சான்றிதழ் அளிக்கப்படும் என்ற விதி உள்ளது. இதனால் கட்டுமான நிறுவனங்கள் , ஒப்பந்ததாரர்கள் இது விஷயத்தில் கவனமாக செயல்படுகின்றனர்.

ஆனால் , புதிய கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் மழை நீர் சேகரிப்பு மற்றும் வடிகால் அமைப்புகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. தனி வீடுகள் நிலையிலும் , இதில் உரிமையாளர்கள் அலட்சியத்துடன் செயல்படுவது மழைக் காலத்தில் பாதிப்பு ஏற்படும் போது தான் தெரிய வருகிறது.

குறிப்பாக புதிய வீடு வாங்கியவர்கள் அதை பயன்படுத்தும் நிலையில் , வடிகால் வசதிகளில் அடைப்பு போன்ற பிரச்னைகள் வராத நிலையில் அதில் மக்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால் அதிக மழை பெய்யும் போது தண்ணீர் வெளியேறாமல் கட்டடத்தில் சேர்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக கட்டடங்களில் மேல் தளத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். மொட்டை மாடிக்கான கட்டுமான பணியின் போதே, தண்ணீர் வெளியேறுவதற்கான வாட்டம் முறையாக இருக்க வேண்டும்.

இத்துடன் மொட்டை மாடியில் சேரும் தண்ணீர் எவ்வித தடையும் இன்றி உடனுக்குடன் வெளியேற வழிசெய்ய வேண்டும். இதற்கான குழாய்கள் இணையும் இடங்களில் உடைப்பு உள்ளிப்ப பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். மொட்டை மாடியில் இருந்து வெளியேற்றப்படும் மழை நீர், நிலத்தில் இறங்க முறையான மழை நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட வேண்டும். இந்த நீர் உறிஞ்சு குழாய்கள் சாதாரணமாக, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.

இதே போன்று நீர் உறிஞ்சு குழிகளில் இருந்து தண்ணீர் நிலத்தில் இறங்கும் வசதி அல்லது கிணற்றில் இறங்கும் வசதி ஆகியவற்றிலும் முறையான பராமரிப்பு அவசியம். இத்துடன் உங்கள் வீட்டை சுற்றி மழைக்காலத்தில் அதிக நேரம் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். சாலையில் உள்ள மழை நீர் வடிகால்களுக்கு உரிய இணைப்பை ஏற்படுத்தி , வீட்டில் இருந்து உபரி மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.

தலைப்பு செய்திகள்

Chennai Port Outer Harbour Project: ₹17,700 கோடியில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரம்மாண்ட திட்டம்! சென்னையில் என்ன நடக்கப்போகிறது? முழு விவரம்!
₹17,700 கோடியில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரம்மாண்ட திட்டம்! சென்னையில் என்ன நடக்கப்போகிறது? முழு விவரம்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
சென்னை மக்களுக்கு பறந்த ஹாப்பி நியூஸ்! அண்ணா பல்கலைக்கழக சிக்னலில் மாறப்போகும் மாபெரும் காட்சி!
சென்னை மக்களுக்கு பறந்த ஹாப்பி நியூஸ்! அண்ணா பல்கலைக்கழக சிக்னலில் மாறப்போகும் மாபெரும் காட்சி!
இன்று மழை இருக்கா, இல்லையா? ஆகஸ்ட் 21 வானிலை நிலவரம்! காஞ்சி, செங்கல்பட்டு, அப்டேட்!
இன்று மழை இருக்கா, இல்லையா? ஆகஸ்ட் 21 வானிலை நிலவரம்! காஞ்சி, செங்கல்பட்டு, அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Embed widget