LPG Cylinder : ஒரு ஹேப்பி நியூஸ்.. சிலிண்டர் விலை எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா மக்களே?
வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 116 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் இருமுறை சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில் அக்டோபர் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு விலையை மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து, குறைந்தும் வருகின்றன.
அந்த வகையில் நவம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடைக் கொண்ட வணிக சிலிண்டர் ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் 14.2 கிலோ எடைக் கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த மாதம் ரூ.2,009-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது குறைந்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஆனால்14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.1,068-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மாதத்துக்கு பிறகு தொடர்ந்து 7-வது முறையாக தற்போது வணிகத்திற்கான கேஸ் சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதமும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டது. ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை குறந்த போதிலும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.
சென்னையில் சமையல் சிலிண்டர் விலை ரூ.1,068.50-ஆக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது. வர்த்தக சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து விலை குறைந்து வருவதால் ஓட்டல் தொழிலில் ஈடுபடுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,200-க்குள் இருந்தால்தான் உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியும். அதிகளவில் ஏற்றி விட்டு சிறிதளவு குறைப்பதால் எந்த பயனும் இல்லை என கருத்து தெரிவிக்கின்றனர்.
ரஷியா-உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் தற்போது இந்த கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியிருக்கிறது. இதனாலேயே தற்போது பெட்ரோல் மற்றும் டீசலில் விலையில் பெரிய மாற்றமின்றி தொடருகிறத்.