பொங்கல் விடுமுறை !! முக்கிய அறிவிப்பு !! மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் ! என்ன மாற்றம் தெரியுமா
சென்னை மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை போல் செயல்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது

மெட்ரோ ரயிலில் அதிகரிக்கும் மக்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். மேலும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், அதிகம் பேர் சென்னை மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை வாசிகள் 15ஆம் தேதிக்கு முன் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விடுவர் என்பதால், 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அட்டவணை போல் இயங்கும்
வழக்கமாக தீபாவளி, பொங்கல், போன்ற அரசு விடுமுறை தினங்களில் சென்னை மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் , வழக்கம் போல் ஞாயிறு அட்டவணைப்படியே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, ஜனவரி 15, 16 மற்றும் 17, 2026 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும். சென்னை மெட்ரோ தனது ரயில் சேவைகளை வழக்கமாக காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்குகிறது.
காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், இரவு 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் மெட்ரோ ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மேலும், இரவு 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் உதவி மையம்
பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ ரெயில் சேவையை உறுதிப்படுத்த, அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.





















