Guduvancheri Bomb: காவலருக்கு நேர்ந்த கொடூரம்! பூட்டிய வீட்டுக்குள் வெடித்த 2 நாட்டு வெடிகுண்டுகள்!
Guduvancheri police station: பூட்டி இருந்த வீட்டை சுத்தம் செய்த போது நடந்த விபரீதம். வெடிகுண்டு வெடித்ததில் கீழே விழுந்த போக்குவரத்து கால் எலும்பு முறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கூடுவாஞ்சேரி பழைய காவலர் குடியிருப்பு
மர்ம பொருள்
நாட்டு வெடிகுண்டு
மூடி மறைக்க முயன்ற காவல்துறை ?
நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலர் சரவணன் மருத்துவமனையில் , அனுமதித்த பொழுது மேலே இருந்து கீழே விழுந்து கால் உடைந்ததாக தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. நாட்டு வெடிகுண்டு விழுந்ததால் தான் அவர் பரண் மேல் இருந்து கீழே விழுந்துள்ளார். ஆனால் ஏன் நாட்டு வெடி கொண்டு வெடித்து , தனியார் காவலர் சரவணன் அனுமதித்த பொழுது, அந்த தகவலை தெரிவிக்காமல் மறுத்தாரா ? என கேள்வி எழும்பியுள்ளது.
முதலில் ஒரு குண்டு மட்டும் வெடித்ததாக தகவல் வெளியாகிய நிலையில், அதன் பிறகு நான்கு நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததாகவும், அதில் இரண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருவதால் இதை காவலர்கள் மூடி மறைக்க முயற்சி செய்தார்களா என கேள்வி எழுந்துள்ளது.
குண்டு எப்படி வந்திருக்கும் ?
காவல் குடியிருப்பு பகுதி என்பதால் , ஏற்கனவே அந்த தங்கி இருந்த காவலர் யாராவது ஒருவர் அங்கு நாட்டு வெடிகுண்டை கொண்டு வந்து வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி யாராவது வைத்திருந்தால், அவர் எதற்காக அப்படி வைத்தார் ?. இந்த நாட்டு வெடிகுண்டு ஏதாவது வழக்கில் சம்பந்தப்பட்டதா ? அப்படி வழக்கில் சம்பந்தப்பட்ட நாட்டு வெடிக்குண்டாக இருந்தால், இது போன்று குடியிருப்பு பகுதியில் வைக்கலாமா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழத் தொடங்கியுள்ளது