மேலும் அறிய

விழுப்புரத்தில் இந்து முன்னணியினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு விநாயகரை எடுத்து சென்ற போலீசார்...!

’’தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் பறிமுதல்’’

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும் ஊர்வலங்கள் செல்வதற்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. கொரோனா தொற்று என்பது அடிப்படை வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னை என்பதால் அரசின் முடிவில் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதிப்பது ஏன் என சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைக்கு கட்டுப்பாடுகளை நீக்கி தளர்வுகளை அளித்ததால் கொரோனா பரவல் அதிகரித்ததாகவும் அதுபோன்றதொரு நிலை தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட்ட தடைவிதித்துள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் தமிழ்நாடு அரசு விதித்த தடையை மீறி பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்போவதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தெரிவித்திருந்தது. 

விழுப்புரத்தில் இந்து முன்னணியினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு விநாயகரை எடுத்து சென்ற போலீசார்...!

Suba Vee Interview: சித்தப்பாகிட்ட சீமான் ஏன் கணக்கு கேக்கல? சுப வீ

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து 3 அடி உயர விநாயகர் சிலையை வைத்து வழிபட முயன்றனர். அப்பொழுது தகவலறிந்த வட்டாட்சியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து அங்கு வழிபாட்டிற்காக  வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையை மட்டும் போலீசார் எடுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரத்தில் இந்து முன்னணியினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு விநாயகரை எடுத்து சென்ற போலீசார்...!

Sasikala: கால்குலேட்டரில் அடங்காத சசிகலாவின் சொத்துகள்

இதேபோல்  திண்டிவனத்தில் இந்து முன்னணி கட்சியினர் விநாயகர் சிலை வைக்க முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அகற்ற முயன்றனர். இதற்கு இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு இருந்த சிலையை எடுத்து சென்று விநாயகர்  கோவில் உள்பகுதியில் வைத்தனர்.

விழுப்புரத்தில் இந்து முன்னணியினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு விநாயகரை எடுத்து சென்ற போலீசார்...!

இப்படி தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று காலையிலேயே வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Porunai River Civilization: பொருநை நாகரிகம்-இது தொல்லியல் பொற்காலம்! ஆனால்.. முத்தாலங்குறிச்சி காமராசு பேட்டி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ஆர்சிபி? படிதார் பாய்சை கட்டுப்படுத்துமா கில் படை?
IPL 2025 RCB vs GT: குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ஆர்சிபி? படிதார் பாய்சை கட்டுப்படுத்துமா கில் படை?
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ஆர்சிபி? படிதார் பாய்சை கட்டுப்படுத்துமா கில் படை?
IPL 2025 RCB vs GT: குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ஆர்சிபி? படிதார் பாய்சை கட்டுப்படுத்துமா கில் படை?
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Nithyananda: ’’எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு- எப்போது?
Nithyananda: ’’எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு- எப்போது?
Embed widget