மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரத்தில் ஆபரேஷன் கந்துவட்டி.. குவியும் புகார்கள்.. வசமாக சிக்கும் கந்துவட்டி முதலைகள்!
தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலிஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபரேஷன் கந்துவட்டி
காஞ்சிபுரம் மளிகை தெருவைச் சேர்ந்த நாகூர் மீரான் (37) சின்னசாமி. நகரைச் சேர்ந்த மகாதேவன் என்பவரிடமிருந்து ஒரு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி 5 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய்வட்டியும் கட்டியுள்ளார். ஆனால் மகாதேவன் மேலும் ரூபாய் 1.30,000 /- அசல் மற்றும் கந்துவட்டி கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக நாகூர் மீரான் கொடுத்த புகாரை பெற்று சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோன்று உத்திரமேரூர் காவல்நிலையம் பஜார் வீதி, பிரபு அவெனயூவைச் சேர்ந்த அப்துல் ரவுப் ( 49 ) அப்பகுதியில் சிறிய கடை நடத்தி வருகிறார். அவர் கருவேப்பம்பூண்டி காலனியை சேர்ந்ததணிகைவேல் என்பவரிடம் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதற்கு மாதா மாதம் வட்டி கட்டிவந்துயுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு ரூபாய் அப்துல்ரவுப் தணிகைவேலிடம் 70 ஆயிரம் ரூபாயை கொடுத்தபோது அவர் இப்பணத்தை அசலில் கழிக்காமல் கந்துவட்டியாக கொடுக்க வேண்டும் என்று கூறி வாங்க மறுத்துவிட்டு, தணிகைவேல் இனிமேல் எனக்கு பணம் தராமல் கடையை திறக்க கூடாது என அசிங்கமாக பேசி மிரட்டியுள்ளார்.
வழக்குப்பதிவு
இது தொடர்பாக அப்துல் ரவுப் கொடுத்த புகாரில் பேரில் உத்திரமேரூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பெங்களூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த ரஞ்சித்குமார்( 44 ), கச்சிப்பட்டு காலனி , கருக்குத் தெருவைச் சேர்ந்த சிம்பு ( எ ) வினோத்குமாரிடம் வீட்டு பத்திரத்தை கொடுத்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு அதற்கு வட்டியாக எழுபத்தி இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் கட்டியுள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் சிம்புவிடம் சென்று பத்திரத்தை திரும்ப கேட்டபோது 4 மாதம் வட்டி பாக்கி மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 840 ரூபாய் கொடுத்தால்தான் பத்திரம் தருவதாகவும், பணத்தோடு ஒரு வாரத்திற்குள் வரவில்லையென்றால் பத்திரம் கிடையாது எனவும் மீறி கேட்டால் தொலைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய வழக்கு பதிவு செய்துயுள்ளார் .
மேலும், காஞ்சிபுரம், பல்லவர்மேடு கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சந்தானம் ( 36 ) காஞ்சிபுரம், பாவாசாகிப் தெருவைச் சேர்ந்த பூபதி ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதற்கு வட்டியாக இதுவரை ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் கட்டிய நிலையில் பூபதி மேலும் ஒரு லட்ச ரூபாய் அசல் மற்றும் கந்துவட்டி கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சந்தானம் கொடுத்த புகாரை பெற்று சிவகாஞ்சி காவல் நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேற்படி கந்துவட்டி குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. கந்து வட்டிக்காரர்கள் நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
காஞ்சிபுரம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion