மேலும் அறிய
Advertisement
வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி..! தேமுதிக பிரமுகர் மகன் உட்பட 4 பேருக்கு வலை
வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் பகுதியில் வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த தேமுதிக பிரமுகர் மகன் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (48). இவர் காட்டாங்கொளத்தூர் வடக்கு தேமுதிக ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் குருபிரசாத், இவர் மீது திருட்டு, அடிதடி, கொலை முயற்சி, உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. குருபிரசாத் அப்பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி குருபிரசாத் தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி உள்ளார். இதனையொட்டி, வேங்கடமங்கலம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த கானா பாடகரான சுரேஷ் என்பவரை, தனது பிறந்தநாளில் கானா பாடல் பாட சொல்லி குருபிரசாத் அழைத்துள்ளார். அதற்கு சுபாஷ் தான் கானா பாடல் பாட மாட்டேன் என மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுபாஷ் சத்திய நகரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குருபிரசாத், தனது நண்பர்களுடன் சுபாஷின் மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த சுபாஷ் ,அவரது தாய் சாமுண்டீஸ்வரி, மனைவி மற்றும் அவருடைய மாமியார் உள்ளிட்ட அனைவரையும் தாக்கியுள்ளார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, சுபாஷின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த, கார் டிரைவர் ஏசுதாஸ் மற்றும் அவருடைய தம்பி சந்திப் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அவர்களையும் குருபிரசாத் மற்றும் அவருடைய நண்பர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சுபாஷின் தாய் சாமுண்டீஸ்வரி, சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதை தெரிந்துகொண்ட குருபிரசாத் அதீத கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த, ஏயேசுதாசை தனது கோஷ்டியுடன் சேர்ந்து உடல் பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு உள்ளனர், இருந்தும் தனது பைக்கில் வைத்திருந்த வீச்சருவாளை எடுத்து குருபிரசாத் மற்றும் அவருடைய நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து ஏசுதாஸின் தலை, கை, கால், உள்பட உடல் முழுவதும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாழம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்குப் போராடிய ஏயேசுதாசை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் மேலும் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குருபிரசாத் மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion