மேலும் அறிய

இயக்குனர் மோகனை செய்யாத குற்றத்திற்காக கைது செய்வதா? - அன்புமணி காட்டம்

எந்த ஒரு வழக்கிலும் ஒருவரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு வழிமுறைகளை வகுத்திருக்கும் நிலையில், அவை எதையும் கடைபிடிக்காமல், ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை: திரைப்பட இயக்குனர் மோகனை செய்யாத குற்றத்திற்காக கைது செய்வதா? உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் பழநி தண்டாயுதபாணி கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார். பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகளை பயன்படுத்துவதாகவும், ஆனால் அதற்கு போதிய சாட்சிகள் இல்லை என்றும் தனது பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பழநி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து இயக்குநர் மோகன் ஜி அவதூறாக கருத்துகளை பரப்பி வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக திருச்சி, பழநி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் உத்தரவின் பேரில், சென்னை ராயபுரத்தில் தங்கி இருந்த இயக்குநர் மோகன் ஜியை கைது செய்வதற்காக திருச்சி எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீஸார் சென்னை விரைந்தனர். அவர்கள் சென்னையில் மோகன் ஜி யை கைது செய்து விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் எந்த வித குற்றமும் செய்யாத நிலையில் சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை காவல்துறை இதுவரை தெரிவிக்கவில்லை. எந்த ஒரு வழக்கிலும் ஒருவரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு வழிமுறைகளை வகுத்திருக்கும் நிலையில், அவை எதையும் கடைபிடிக்காமல், ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல மோகனை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் பஞ்சாமிர்தம் சில வாரங்களுக்கு முன் பெருமளவில் அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்ட ஐயங்களைத் தான் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் இது தொடர்பான செய்திகள் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தான் அவர் கூறியிருந்தார். இதில் எந்தத் தவறும் இல்லை. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் அழிக்கப்பட்டதன் பின்னணி குறித்த முழு விவரங்களை அரசு வெளியிட்டிருந்தால் இந்த சிக்கலே எழுந்திருக்காது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் சிக்கல் தொடர்பாக சமயபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கிருந்து தனிப்படை காவலர்கள் விரைந்து வந்து மோகனை கைது செய்திருப்பதன் பின்னணியில் திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலை இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்யாத தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக் கூடாது. இயக்குனர் மோகனை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

" பேனர் வைப்பதில் தகராறு " ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப் பகலில் வெட்டிப் கொலை
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget