Watch Video: உங்களுக்கு தானே ஓட்டு போட்டோம் எங்களை வெளியேற்றுவது நியாயமா? - போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகள்
’’காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் கஜலட்சுமி, ஆய்வு செய்து பட்டா வழங்கலாம் என்று அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலம் மேய்க்கால் வகையை சார்ந்தது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’’
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடம் சதுப்பு நில பகுதி என்பதால் இதனை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த சேகர் என்பவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அங்குள்ள வீடுகளை அகற்றும்படி வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அங்கு வசித்து வந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2800 வீடுகளை இடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இன்று கடைசி நாளாக இன்று நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்க வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிந்து அப்பகுதி தகவல் அறிந்து மக்கள் தற்போது அந்த பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் போராட்டம் மேற்கொள்ளப் மேற்கொள்ளப்பட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நாங்கள் வசிக்கும் பகுதியை நத்தமாக வகை மாற்றம் செய்யப்பட்டு அரசாணை நிலம் எண் 43/2015 ன் கீழ் பெத்தேல் நகருக்கு பட்டா வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் கஜலட்சுமி, ஆய்வு செய்து பட்டா வழங்கலாம் என்று அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலம் மேய்க்கால் வகையை சார்ந்தது என வருவாய் துறை, வனத்துறை உறுதிபடுத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இருந்தும் தற்போது இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்று வருவாய்த் துறை நோட்டீஸ் கொடுப்பது ஏற்புடையதல்ல என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#JUSTIN
— ABP Nadu (@abpnadu) January 10, 2022
குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்
‘உங்களுக்கு தானே ஓட்டு போட்டோம்’ எங்களை வெளியேற்றுவது நியாயமா..? என கேட்டு குடியிருப்பு வாசிகள் தமிழக அரசுக்கு எதிராக முழக்கம்#InjambakkamProtest pic.twitter.com/tymjzp0A76
இதேபோல் சென்னை தீவுத்திடல் கடந்த டிசம்பர் மாதம் பத்தாம் தேதி குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கூவம் ஆற்றில் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்