ஆபத்தை உணராமல் இப்படி செய்யலாமா? ரயிலுக்கு அடியில் சென்று தண்டவாளத்தை கடந்த மக்கள்
ஆவடியில் ரயில் நிலையத்தில் நடைமேடை தாண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் அடியில் புகுந்து தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியில் ரயில் நிலையத்தில் நடைமேடை தாண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் அடியில் புகுந்து தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் முக்கிய நிலையமாக திகழ்கிறது ஆவடி. இங்கு மத்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.ஆவடி ஆணையரங்கம், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் உள்ளன.இதைத் தவிர ஆவடியைச் சுற்றி ஏராளமான பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள் உள்ளன.இவர்களில் பெரும்பாலானோர் ரயில் மூலம் ஆவடிக்கு வருகின்றனர். ஆகையால் பல ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்லும் முக்கிய இடமாக ஆவடி ரயில் நிலையம் திகழ்கிறது.ஆவடி ரயில் நிலையம் சென்னை-திருப்பதி நெடுஞ் சாலைக்கும், புதிய ராணுவ சாலைக்கும் இடையில் அமைந்துள்ளது.இந்த ரயில் நிலையத்தில் குறுக்கே கடந்து செல்வதற்காக ரயில்வே கேட் அமைக்கப்பட்டது. நாளடைவில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தண்டவாளத்தில் நடந்து செல்வதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ஒருபுறம் சுவர் எழுப்பி ரயில்வே கேட் மூடப்பட்டது. இருந்த போதிலும் நடை மேம்பாலத்தை பயன்படுத்தாமல் பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கின்றனர்.
ஆபத்தை அறியாமல் சாகசம்
இந்த நிலையில் இன்று ஆபத்தை உணராமல் ஆவடி ரயில் நிலையத்தில் நிற்கும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு அடியில் பொதுமக்கள் புகுந்து செல்கின்றனர். குறிப்பாக கை குழந்தையோடு வந்த பெண் ஒருவர் எக்ஸ்பிரஸ் ரயில் கீழ் புகுந்து மற்றொரு புறம் சென்றார். அதேபோல பள்ளி,கல்லூரி மாணவர்கள், காவலர்கள்,பெண்கள், முதியவர்கள் என அனைவரும் ரயிலுக்கு அடியில் உயிரை பணயம் வைத்து இந்தச் செயலை செய்கின்றனர்.
அதில் முதியவர்கள் ரயில் அடியில் குனிந்து செல்லும் போது தலையில் அடிபடுகிறது. அதனையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ரயிலின் அடியில் புகுந்து செல்கின்றனர்.அந்த சமயத்தில் இன்னொரு வழிதடத்தில் மின்சார ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்படியான நிலையிலும், இந்தப் பக்கம் இருப்பவர்கள் ரயிலுக்கு கீழே சென்று தண்டாவாளத்தை கடப்பதை காண முடிந்த்து. அதோடு, ரயிலுக்கு அடியில் புகுந்து வருவதே ஆபத்தானது. அப்படியான நிலையிலும், ஒருவர் ஃபோன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்து மறுபுறம் வந்து பேசுகிறார்.
மக்களின் பாதுகாப்பிற்காகவும் விபத்துக்களை தவிர்க்கவும் நடை மேம்பாலத்தை பயன்படுத்துங்கள் என ரயில்வே துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.ஆனாலும் மக்கள் இதில் உள்ள ஆபத்தை உணராமல் செயல்படுவது வருத்தத்திற்குரியது. ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள (HIGH CAPACITY PARCEL VAN) சரக்கு ரயில் ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து மழையில் நனையாமல் இருக்க பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு டெல்லி பண்ட் நகருக்கு செல்லும். பணி இல்லாததாலும், எக்ஸ்பிரஸ் ரயிலை ராயபுரம் ரயில் நிறுத்தத்தில் நிறுத்த இடம் இல்லாததாலும் ஆவடி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல