Chennai Metro Work: கவனம்..! சென்னை அடையாறு சந்திப்பு மெட்ரோ பணிகள் - போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு
Chennai Metro Work: சென்னை அடையாறு சந்திப்பில் மெட்ரோ பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Chennai Metro Work: சென்னை அடையாறு சந்திப்பில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அடையாறு சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்:
சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் அடையாறு சந்திப்பில் மெட்ரோ பணிகளை மேற்கொள்ள உள்ளதால், அப்பகுதிகளில் பின்வரும் போக்குவரத்து மாற்று வழிகள் முன்மொழியப்பட்டு 26.10.2024 மற்றும் 27.10.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.
🚦Owing to CMRL work at Adyar Junction, the following traffic diversions are proposed and will be implemented for two days on 26.10.2024 & 27.10.2024 on a trial basis.#chennaipolice #TrafficAlert pic.twitter.com/3kXmBQAHPl
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) October 24, 2024
- சர்தார் வல்லபாய் படேல் சாலையில் இருந்து கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அடையாறு பஸ் டிப்போ சந்திப்பில் காந்தி நகர் 2வது குறுக்குத் தெரு வழியாக ராமசந்திரா ஆதித்தனார் சாலையில் வலது புறம் திரும்பி தேஸ்முக் துர்காபாய் சாலை அடைந்து இடது புறமாக திரும்பி திரு.விகள் பாலம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- ஒரு வழிச்சாலையாக இருந்த அடையார் மேம்பாலம் இரு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
- திரு.வி.கா பாலத்திலிருந்து அடையார். திருவான்மியூர், பெசன்ட் நவர். OMR மற்றும் மத்திய கைலாஷ் செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை வழக்கம் போல் செல்லலாம்.
- S.V. பட்டேல் சாவையிலிருந்து LB சாலை வழியாக அடையார். திருவான்மியூர் மற்றும் பெசன்ட் நகர் செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை வழக்கம் போல் செல்லலாம்.
- LB சாலை வழியாக கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் மற்றும் கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை வழக்கம் போல் செல்லலாம்.
- பெசண்ட் நகரிலிருந்து கிரீன்வேஸ் சாவை. மெரினா கடற் மற்றும் மயிலாப்பூர் நோக்கிச் செல்லும் கணங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்யை வழக்கம் போல் செல்லலாம்.
மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என சென்னை மாநக போக்குவரத்து காவல்துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.