மேலும் அறிய

வடகிழக்கு பருவமழை ; சென்னையில் 300 இடங்கள் தாழ்வான பகுதி - தலைமை செயலாளர் முருகானந்தம்

பருவ மழையை எதிர்க் கொள்ள அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளது என தலைமைச்செயலாளர் முருகானந்தம் பேட்டி

வடகிழக்கு பருவ மழை - தலைமை செயலாளர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள சூழலில் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

உடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைச் செயலாளர் அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேஷ் லக்கானி, சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் பாலசந்திரன், தனியார் வானிலை கணிப்பாளர் பிரதீப் ஜான் உள்ளிட்டோர் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு முடிந்து ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமைச்செயலளார் முருகானந்தம் பேசியதாவது

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நாளை காலை முதல் துவங்கும் என சொல்லப்பட்டு இருக்கிறது. நிபுணர்களும் நாளை அதிக மழைக்கு வாய்ப்பு  இருக்கும் என தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக 16,17 ஆகிய தேதிகளில் மிக அதிகமான மழை இருக்கும் என தெரிவித்திருக்கிறார்கள். 

பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

குறிப்பாக கடலோரப் பகுதிகளில் அதிக கன மழை வரும் என தெரிவித்திருக்கிறார்கள். நாளை சென்னை மற்றும் மூன்று சுற்று வட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டத்திற்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுப்பார்கள். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை இன்று முதல் செயல்பட இருக்கிறார்கள். 

கண்காணிப்பு அலுவலர்கள் படகுகள் உள்ளிட்ட உபகரணங்களை இப்போது இருந்து செயல்பட உள்ளது என முதல்வர் அறிவித்திருக்கிறார். 16, 17 தேதிகளில் ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்ற நபர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளோம். நாங்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு இருப்போம் என தெரிவித்தார்.

300 இடங்கள் தாழ்வான பகுதிகள்

சென்னையில் எங்கெல்லாம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேவையோ அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
சென்னை முழுவதும் 300 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னை உட்பட சுற்றுவட்ட 3 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளது.

கடந்த முறை எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியு உள்ளது என்பதனை பார்த்து அதற்கேற்ற வளர்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்றுவதற்காக பம்புகளும் தயார் நிலையில் உள்ளது. மற்ற பணிகளால் ஆங்காங்கே குழிகள் உள்ளது, பாதுகாப்பின் பொருட்டு பாதுகாப்பாக அந்த குழிகளை மூடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளை மாவட்ட ஆட்சியர்கள் கண்டறிந்துள்ளனர். தேவைப்படும் போது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 
மின்சார துறைக்கும் போதுமான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் தயார் நிலையில் உள்ளார்கள். செம்பரம்பாக்கம் ஏரியில் 33 % தான் தண்ணீர் உள்ளது. மழைநீர் வடிகால் எத்தனை சதவிகித மழையை தாங்கும் என சொல்ல முடியாது. 

பொதுமக்களை தங்க வைக்க ஏற்பாடுகள்

வேளச்சேரி போன்ற தாழ்வான பகுதிகளில் அதிகப்படியான பம்புகள் இயக்கப்பட்டு அங்கு இருக்கும் தண்ணீர் வெளியேற்றப்படும். கடந்த 30 ஆம் தேதியில் இருந்து மெட்ரோ மற்றும் மின்சாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக சாலைகள் நடைபெற்ற வந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 300 இடங்களில் சமைப்பதற்கான இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களை தங்க வைப்பதற்கு போதுமான அளவிலான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பயப்பட வேண்டாம்”: சென்னையில் எந்த நேரத்தில் மழை பெய்யும்: துல்லியமாக விளக்கிய வானிலை மைய இயக்குநர்
”பயப்பட வேண்டாம்”: சென்னையில் எந்த நேரத்தில் மழை பெய்யும்: துல்லியமாக விளக்கிய வானிலை மைய இயக்குநர்
Nobel Prize 2024: பொருளாதாரத்துக்கான நோபல் 3 பேருக்குக் கூட்டாக அறிவிப்பு; யாருக்கு ஏன்?
Nobel Prize 2024: பொருளாதாரத்துக்கான நோபல் 3 பேருக்குக் கூட்டாக அறிவிப்பு; யாருக்கு ஏன்?
வேளச்சேரி மக்கள் உஷார் தான் போல.. விழுந்த அடி அப்படி.. பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள் - காரணம் என்ன?
வேளச்சேரி மக்கள் உஷார் தான் போல.. விழுந்த அடி அப்படி.. பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள் - காரணம் என்ன?
கனமழை எச்சரிக்கை!  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அட்வைஸ் - என்னென்ன?
கனமழை எச்சரிக்கை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அட்வைஸ் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kallakurichi : கள்ளச்சாராய விற்பனை ஜோர் கள்ளக்குறிச்சியில் மீண்டும் பகீர்.. ஆக்‌ஷனில் இறங்கிய POLICETVK Maanadu : 234 தொகுதிக்கும் ரெடி! மாஸ் காட்டும் விஜய்! TVK பக்கா ப்ளான்Chennai rain : நாங்க ரெடி! நீங்க ரெடியா? புரட்டி போடப்போகும் மழை! சென்னை மாநகராட்சி அட்வைஸ்Prisoners Ramayana | சிறையில் ராமாயண நாடகம்! சீதையை தேடுவது போல் எஸ்கேப்! கம்பி நீட்டிய வானர கைதிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பயப்பட வேண்டாம்”: சென்னையில் எந்த நேரத்தில் மழை பெய்யும்: துல்லியமாக விளக்கிய வானிலை மைய இயக்குநர்
”பயப்பட வேண்டாம்”: சென்னையில் எந்த நேரத்தில் மழை பெய்யும்: துல்லியமாக விளக்கிய வானிலை மைய இயக்குநர்
Nobel Prize 2024: பொருளாதாரத்துக்கான நோபல் 3 பேருக்குக் கூட்டாக அறிவிப்பு; யாருக்கு ஏன்?
Nobel Prize 2024: பொருளாதாரத்துக்கான நோபல் 3 பேருக்குக் கூட்டாக அறிவிப்பு; யாருக்கு ஏன்?
வேளச்சேரி மக்கள் உஷார் தான் போல.. விழுந்த அடி அப்படி.. பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள் - காரணம் என்ன?
வேளச்சேரி மக்கள் உஷார் தான் போல.. விழுந்த அடி அப்படி.. பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள் - காரணம் என்ன?
கனமழை எச்சரிக்கை!  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அட்வைஸ் - என்னென்ன?
கனமழை எச்சரிக்கை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அட்வைஸ் - என்னென்ன?
TN Rains: காத்திருக்கும் கனமழை! அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் போட்ட 21 கட்டளைகள் - முழு விவரம்
TN Rains: காத்திருக்கும் கனமழை! அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் போட்ட 21 கட்டளைகள் - முழு விவரம்
Chennai Red Alert: 4 நாட்களுக்கு Work From Home: நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவு!
Chennai Red Alert: 4 நாட்களுக்கு Work From Home: நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவு!
Schools Colleges Holiday: அதி கனமழை எச்சரிக்கை; சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
Schools Colleges Holiday: அதி கனமழை எச்சரிக்கை; சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
TN Rain Alert : “எந்தெந்த மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும்” இதோ லிஸ்ட் – மக்களே எச்சரிக்கை..!
TN Rain Alert : “எந்தெந்த மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும்” இதோ லிஸ்ட் – மக்களே எச்சரிக்கை..!
Embed widget