மேலும் அறிய

சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த முக்கிய கட்டிடம்.. அட இதுல இவ்வளவு இருக்கா...?

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன 6 அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் இன்று நள்ளிரவு 12.01 மணி அளவில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது

சென்னை விமான நிலையத்தில் புதிதாக ஆறு அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூபாய் 250 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கார் பார்க்கிங்கில் 2,150 வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களும் இங்கு நிறுத்தலாம். அதற்கு சார்ஜ் ஏற்றுவதற்கான கருவிகளும், கார் பார்க்கிங்கிள் அமைக்கப்பட்டுள்ளன. 

சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த முக்கிய கட்டிடம்.. அட இதுல இவ்வளவு இருக்கா...?
 
புதிய அதிநவீன கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவதை ஒட்டி, தற்போது பயன்பாட்டில் இருக்கும் தரைதள பழைய கார் பார்க்கிங், சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் மூடப்படுகிறது. அதன் பின்பு பழைய கார் பார்க்கிங்கில் கார்கள் நிறுத்த அனுமதி இல்லை. இந்த மல்டி லெவல் ஆறு அடுக்கு புதிய கார் பார்த்திங்கள் தான், உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களுக்கு வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று  விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. 

சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த முக்கிய கட்டிடம்.. அட இதுல இவ்வளவு இருக்கா...?
 
இதற்கு இடையே புதிய கார் பார்க்கிங்கில் கட்டணம் விகிதங்களையும்அறிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள், முதல் 30 நிமிடங்கள் நிறுத்துவதற்கு ரூபாய் 20. அதற்கு மேல் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு 2 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூபாய் 25. தற்போதைய புதிய மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் இரு சக்கர வாகனங்கள் 30 நிமிடங்கள் வரை நிறுத்துவதற்கு அதே 20 ரூபாய் தான். ஆனால் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 30. அதை போல் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தி இருந்தால் ரூபாய் 90.

சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த முக்கிய கட்டிடம்.. அட இதுல இவ்வளவு இருக்கா...?
 
கார்களுக்கு 30 நிமிடத்திற்கு தற்போது, ரூபாய் 40 வசூலிக்கப்படுகிறது.இனிமேல்  புதிய கார் பார்க்கிங்கில் 30 நிமிடங்களுக்கு ரூபாய் 75. ஏற்கனவே உள்ள பழைய கார் பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூபாய் 100. இனிமேல் புதிய கார் பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூபாய் 150. மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை கார்கள் நிறுத்தி இருந்தால் ரூபாய் 500.

சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த முக்கிய கட்டிடம்.. அட இதுல இவ்வளவு இருக்கா...?
 
வேன், டெம்போக்களுக்கு தற்போதைய  பார்க்கிங்கில், 30 நிமிடங்களுக்கு ரூபாய் 40. ஆனால் புதிய  பார்க்கிங்கில் 30 நிமிடங்களுக்கு ரூபாய் 300. மேலும் 2 மணி நேரம் வரை நிறுத்தினால் பழைய  பார்க்கிங்கில், ரூபாய் 110.புதிய  பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 300. மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 1,000. பஸ், டிரக்குகளுக்கு  ஏற்கனவே உள்ள  பார்க்கிங்கில் 30 நிமிடம் வரை நிறுத்தினால் ரூபாய் 50. தற்போதைய புதிய பார்க்கிங்கில் ரூபாய் 600. பழைய பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 110. புதிய பார்க்கிங்கில் ரூபாய் இரண்டு மணி நேரம்  நிறுத்தினால் ரூபாய் 600. மேலும்  10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால், ரூபாய் 2,000. இவ்வாறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண விகிதங்கள் வரும் ஞாயிறு நான்காம் தேதி அதிகாலை 12 மணி ஒரு நிமிடத்தில் இருந்து    அமுலுக்கு வந்தது அதோடு அதிநவீன மல்டி லெவல் ஆர் அடுக்கு கார் பார்க் கிங் பயன்பாட்டுக்கு வந்தது உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
 
 

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
குறைந்தபட்ச கட்டணம் ரூ.50? தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு பற்றி வெளியான முக்கிய அப்டேட்!
குறைந்தபட்ச கட்டணம் ரூ.50? தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு பற்றி வெளியான முக்கிய அப்டேட்!
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் பயணிகளே உஷார்! நாளை முதல் ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்!
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் பயணிகளே உஷார்! நாளை முதல் ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget