மேலும் அறிய

Chennai Weather: சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காலை மழை.. 20 மாவட்டங்களில் தொடர வாய்ப்பு...

Chennai Weather: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலையிலேயே மழை பெய்த நிலையில், 20 மாவட்டங்களில் 10 மணி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், காலையிலேயே பரவலான மழை பெய்த நிலையில், 10 மணி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் பரவலாக பெய்த மழை

சென்னையில் இன்று காலையிலேயே பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் வெயில் வாட்டி வந்த நிலையில், புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே மழை பெய்தது. இந்நிலையில், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், ஆலந்தூர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

இதேபோல், தென் தமிழகத்தில் சிவகங்கை, காரைக்குடி, திண்டுக்கல்,  புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் காலையிலேயே மழை பெய்துள்ளது. அதிகாலை மழையால், வானிலை குளிர்ச்சியாக மாறியதால்  மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

20 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு - வானிலை மையம்

இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
Tamil Nadu Budget 2026: இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் வெளியான மாஸ் அப்டேட்!
இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் மாஸ் அப்டேட்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
பெண்களை இழிவா பேசுறவங்களுக்கு ஆண்மையே கிடையாது! - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!
பெண்களை இழிவா பேசுறவங்களுக்கு ஆண்மையே கிடையாது! - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget