சுய உதவிக்குழுக்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்... விரைவில் ரூ.7.11 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி...!
”மாநில அரசு பெண்களுக்கு பலதரப்பட்ட திட்டங்களை உருவாக்கி அவற்றை செயல்படுத்தி வருகிறது. பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன” - ஐ.பெரியசாமி
சுய உதவிக் குழு கடன் திட்டத்தின் கீழ் 293 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.11 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் ராயபுரம் கிளைக்கு சொந்த அலுவலகக் கட்டடத்தை இன்று (அக்.17) கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இந்நிகழ்வில் குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஐ.பெரியசாமி, “தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் தமிழ்நாடு முதலைமைச்சர் சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் ராயபுரம் கிளைக்கு ரூ.108 லட்சம் செலவில் 3,928 சதுர அடி பரப்பளவில் ஏடிஎம் வசதியுடன் கூடிய சொந்த அலுவலகம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
சென்னை மத்திய கூட்டுறவு வங்கி, ராயபுரம் கிளை அலுவலக கட்டடத்தை, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.@IPeriyasamymla, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.@PKSekarbabu ஆகியோர் திறந்து வைத்தனர்.#DMKDindigul | #DMK4TN | #DMKChennai pic.twitter.com/SJEQ8lonm0
— Dindigul DMK (@DMKDindigul) October 17, 2022
அவரது அறிவிப்பினைத் தொடர்ந்து தற்போது சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் ராயபுரம் கிளையின் புதிய அலுவலகக் கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி 10.07.1930 அன்று பதிவு செய்யப்பட்டு கடந்த 92 ஆண்டுகளாக சென்னை மாநரில் செயல்பட்டு வருகிறது. சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இதர வகை கூட்டுறவு சங்கங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
மேலும் வங்கியின் இணை உறுப்பினர்களான பொது மக்களுக்குத் தேவையான அனைத்து வகை கடன்களையும், இவ்வங்கி வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி, அரசால் அறிவிக்கப்படும் நலத்திட்ட கடனுதவிகள் மற்றும் பண்ணை சாரா கடன்கள் அனைத்தும் குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் மேம்பாட்டுக்காக கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, அரசு நிபந்தனைகளுக்கு உள்பட்டு 5,758 பயனாளிகளுக்கு ரூ.29.09 கோடி அளவுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழு கடன் திட்டத்தின் கீழ் 293 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.11 கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
"மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அறிவித்திருந்தபடி, கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ 2,756 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ஓரிரு வாரங்களில் பயனாளிகளுக்கு ரசீதுகள் வழங்கப்படும்"
— DMK IT WING (@DMKITwing) October 17, 2022
- கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு @IPeriyasamymla அவர்கள். pic.twitter.com/ZPwuO8l26T
மாநில அரசு பல்வேறு திட்டங்களை ஆக்கப்பூர்வமாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு பலதரப்பட்ட திட்டங்களை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறது. அவர்கள் வாழ்வாதாரம் மேம்பாட்டுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், மகளிர் சுயஉதவிக் குழு கடன் போன்றவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. நகைக்கடன் பெற்றுள்ள உறுப்பினர்களின் ரசீதுகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் கே.ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம், ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி, சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் மகேஷ் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் அமலாதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.