முதல்வர் ஸ்டாலின் ஏன் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகவில்லை? - அமைச்சர் மா.சு., கொடுத்த விளக்கம்
உயர் பதவியில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால், சாமானியர்களுக்கு இடையூறு ஏற்படும் அதனால்தான் முதலமைச்சர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்
சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பேட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதல் அமைச்சர் முக.ஸ்டாலின் சார்பில் விரைவில் தொடங்கப்பட உள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பு ;
மருத்துவத் துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். அந்த வகையில் வரும் 2ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், மக்களை மிக பெரிய அளவில் கவரும் திட்டம் இது. முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் இது. இதில் தனியாரில் 15 ஆயிரம் அரசு மருத்துவமனையில் 4 ஆயிரம் ஆகும். 2 - ம் தொடங்கி வைக்கிறார்கள்.
பொது அறுவை சிகிச்சை மகப்பேறு மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம் இருதயவியல் மருத்துவம், பல் மருத்துவம் கண் மருத்துவம் , காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், ஈரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை அனைத்து மருத்துவங்களும் இதில் இடம் பெற உள்ளனர் மொத்தமாக – 1256 முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. ஒரு நாள் சனிக்கிழமை அன்று நடைபெறும். முழுவதும் கட்டணமில்லாமல் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் சேவை வழங்கப்படும்.
தனியார் மருத்துவமனையில் முதல்வர் சிகிச்சை பெறுவது குறித்து, ஏன் முதல்வர் அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார் என்ற கேள்விக்கு ;
ஆளுநராக இருந்த தமிழிசைக்கு அரசு மருத்துவமனை எப்படி செயல்படும் என்று தெரியும். அண்மையில் கூட பாதுகாப்பு துறை அமைச்சரின் மனைவி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார். பிரதமரின் சகோதரர் கூட தனியார் மருத்துவமனையில் தமிழகத்தில் சிகிச்சை பெற்றார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உயர் பதவியில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால் சாமானியர்களுக்கு இடையூறு ஏற்படும் அதனால் தான் முதலமைச்சர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார் அரசு மருத்துவமனைகளின் தரம் மிகவும் மேலோங்கி இருக்கிறது என்றார்.





















