Chennai Drainage : "மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் 3 நாட்களில் முடிவடையும்" - அமைச்சர் எ.வ.வேலு
TN Minister: மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்துள்ளார்.
TN Minister: மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்துள்ளார்.
மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சென்னையில் நிருபர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
95 சதவீத பணிகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5 சதவீத பணிகள் மூன்று நாட்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்துள்ளார். குறிப்பாக ஜாஃபர்கான் பேட்டை, வால்டாக்ஸ் சாலை பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து செய்தியாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தது மிகுந்த வருதத்தை அளிக்கிறது. செய்தியாளர் உயிரிழப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் உயிரிந்த அப்பகுதியில் பாதுகாப்புகள் முறையாக போடப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு இல்லை என்று செய்திகள் வெளியாவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார். எந்த ஒரு சாலைப் பணிகளாக இருந்தாலும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் என்னக் காரணம் என்று இதுவரை தெரியவில்லை. உரிய விசாரணைக்கு பின்னரே என்ன நடந்தது என்பது கூற முடியும் என தெரிவித்தார்.
செய்தியாளர் உயிரிழந்தது எப்படி?
சென்னை தரமணி அடுத்த கந்தன் சாவடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (24). இவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் ஜாபர்கான்பேட்டையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். இவருடன் சென்றுக்கொண்டிருந்த சக செய்தியாளர்கள் இவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த செய்தியாளர் முத்துகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டதின் கீழ் ரூ.3 லட்சமும், சேர்த்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Joe Biden: "ரிஷி சுனக் பிரதமரானது பிரமிக்க வைக்கிறது" - அமெரிக்க அதிபர் புகழாரம்..!