Senthilbalaji : அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை..!
அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகள் எண்ணுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கோவையில் ஞாயிறு அதிகாலை நிகழ்ந்த கார் வெடிகுண்டு விபத்தையடுத்து, தமிழக அரசை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார். இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல் என சந்தேகிப்பதாக அண்ணாமலை கூறினார். இதற்கு தக்க பதிலளிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்.
— K.Annamalai (@annamalai_k) October 25, 2022
இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? (1/5) pic.twitter.com/69CjR5qHgv
இந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பதிவில் அவர் தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா?அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா ? அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா? என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது.
தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது. (1/3)
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 25, 2022
கோவையில் சம்பவம் நடந்தவுடன் முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன.
கோவையில் சம்பவம் நடந்தவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன. (2/3)
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 25, 2022
அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். ‘நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க’ என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது.
அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். ‘நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க’ என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது. (3/3)
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 25, 2022