(Source: Poll of Polls)
காஞ்சிபுரத்தில் இன்று 600 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது.! தங்க காசு யாருக்கு..
காஞ்சிபுரத்தில் இன்று 600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை இன்று கொரோனா தடுப்பூசி முகாம் அனைத்து வட்டாரத்திலும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 தடுப்பூசி முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இன்று 600 முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த கொரோனா தடுப்பூசியானது 100% பாதுகாப்பானது. ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 2 வது தடுப்பூசி நிலுவையில் இருந்தால் அவர்களும் இந்த முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
முதல் தவணையினை போடாதவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொண்டு தங்களும் தங்கள் குடும்பத்திலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுப்பதற்கு நம் கையில் உள்ள ஆயுதம் தடுப்பூசியே ஆகும். குறிப்பாக இரத்த அழுத்தம், சர்க்கரைநோய் உள்ளவர்களும் தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அவசியமானது
இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் சுமார் 60,000 தடுப்பூசி போட காஞ்சிபுரம் மாவட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியே, இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போடாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் பெருநகராட்சி
காஞ்சிபுரம் நகராட்சியில் கோவிட் இல்லாத காஞ்சிபுரம் என்ற பெயரில் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் மூன்று நபர்களுக்கு தங்கக்காசு மற்றும் 10 நபர்களுக்கு ஆறுதல் பரிசு அளிக்கப்பட உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 12.09.21 நடைபெறும் மாபெரும் 600 தடுப்பூசி முகாம்களின் இடங்கள் @enga_ooru @kpmpolicefor @360Kanchipuram @360Kanchipuram @DMKKanchipuram @thamoanbarasan @EzhilarasanCvmp @trilokchronicle pic.twitter.com/CABUY9IsmC
— District Collector Kancheepuram (@KanchiCollector) September 11, 2021
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 12.09.21 நடைபெறும் மாபெரும் 600 தடுப்பூசி முகாம்களின் இடங்கள் @enga_ooru @kpmpolicefor @360Kanchipuram @360Kanchipuram @DMKKanchipuram @thamoanbarasan @EzhilarasanCvmp @trilokchronicle pic.twitter.com/vMCyfsZo3u
— District Collector Kancheepuram (@KanchiCollector) September 11, 2021