மேலும் அறிய

தொடரும் மழை: தயார் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்..! துறைரீதியாக களத்தில் இறங்கும் அலுவலர்கள்..!

" தெருக்களில் விநியோகிக்கப்படும் குழாய்களில் உடைப்புகள் இருப்பின் உடனே கண்டறிந்து சீர் செய்யப்பட வேண்டும் "

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த செங்கல்பட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் .ஆ.ர.ராகுல்நாத், முன்னிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.  

களப்பணியில் ஈடுபடும்போது

மழைக்காலமாக இருப்பதால் காய்ச்சல் பலருக்கு வருகிறது.  சுகாதாரத்துறையினர் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தொடர் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் களப்பணியில் ஈடுபடும்போது, தோழமைத் துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி, மாநகராட்சி மூலம் நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் தற்காலிக கொசுப்புழுத் தடுப்பு பணியாளர்கள் (DBC), வீட்டைச் சுற்றியுள்ள பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நல்ல நீரில் தான் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகுவதால் அந்தக் கொசு உற்பத்தியைத் தடுக்க வேண்டும்.  குளோரினேசன் செய்யப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த குடிநீரை அந்தந்தப் பகுதி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, இப்பணியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.   அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்ய காலமுறைப்படி குடிநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.

டெங்கு

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்புப் பணிகளைத் துரிதப்படுத்த ஊராட்சி, நகராட்சி  மற்றும் மாநகராட்சி  நிர்வாகங்கள் தேவைப்படும் DBC என்ற தற்காலிக நோய்த் தடுப்புப் பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். பொது இடங்களில் உள்ள குப்பை, பிளாஸ்டிக் கப்புகள், தேவையற்ற டயர்கள், மழைநீர் தேங்கும் கட்டமைப்புகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாகப் பெற்றோர்களுக்குத் தெரிவித்து, சிகிச்சை அளிக்கவும்,  மேலும் பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல்  இருக்கிறதா என அறிந்தும் அவர்கள் விவரங்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தெரிவிக்கவும்  கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரிந்துரையின்றி மருந்துகள் விநியோகம்

ஊட்டச்சத்து மற்றும் சமூக நலத்துறையினர் அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் இருப்பின், அந்தந்தப் பகுதி சுகாதாரத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். மருத்துவத் துறையைப் பொறுத்தமட்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேரும் காய்ச்சல் கண்டவர்கள் விவரம், சுகாதாரத் துறையினருக்குத் தகவல் தரப்பட வேண்டும்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான இடவசதி, மருந்து மாத்திரைகள் முன்னேற்பாடாக செய்து வைத்திடல் வேண்டும். தனியார் மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது.  இது தொடர்பாக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சித்த மருத்துவத்துறை, அனைத்து காய்ச்சல் கண்ட நபர்களுக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும்.

குடிநீர் வடிகால் வாரியம்

குடிநீர் வடிகால் வாரியம் மழைக்காலங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.   மேல்நிலைத் தொட்டிக்கு வரும் குழாய்கள், தொட்டியிலிருந்து வெளியேறும் குழாய்கள், தெருக்களில் விநியோகிக்கப்படும் குழாய்களில் உடைப்புகள் இருப்பின் உடனே கண்டறிந்து சீர் செய்யப்பட வேண்டும்.மேற்கண்ட துறைகள் அனைத்தும், தொடர்ச்சியான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு நோய்த்தொற்று பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
டெல்டா மக்களுக்கு இனி கவலையில்லை ... ரூ.4,730 கோடியில் ரெடியாகும் தேசிய நெடுஞ்சாலை - எப்போது வரும்?
டெல்டா மக்களுக்கு இனி கவலையில்லை ... ரூ.4,730 கோடியில் ரெடியாகும் தேசிய நெடுஞ்சாலை - எப்போது வரும்?
Embed widget