Trains Cancelled: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி மக்களே! இதை தெரிஞ்சிட்டு போங்க! இன்று மட்டும் 41 புறநகர் ரயில்கள் ரத்து: எங்கெல்லாம்?
விடுமுறை நாள் என்பதாலும், பராமரிப்பு பணி காரணமாகவும் சென்னையில் 41 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரையிலுள்ள வழிதடத்தில் இன்று பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அதனை முன்னிட்டு 41 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடம்பாக்கம், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் இன்று ஒரு நாள் மட்டும் காலை 11 மணி முதல் 3:15 மணி வரை நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விடுமுறை தினம் என்பதால் சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை ரயில்வே மார்க்கத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டம் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் இன்று விடுமுறை என்பதால் ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும் என சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை, அரக்கோணம், செங்கல்பட்டு , சூலூர்கோட்டை ஆகிய வழித்தடங்களில் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம். இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு, ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் வேலைக்கு செல்பவர்கள் பாதிப்படைய மாட்டார்கள் என்பதால் அத்தியாவசிய பணிக்காகவோ அல்லது வேறு பணிக்காகவோ இந்த மார்க்கத்தில் செல்ல இருப்பவர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு வேறு போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.