மேலும் அறிய

அதிகரித்த கடத்தல் சம்பவங்கள்.. சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் மீது பாய்ந்த நடவடிக்கை.. நடந்தது என்ன ?

சென்னை சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பலர் கூண்டோடு இடமாற்றம்.

சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில், ரூ. 167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கம் கடத்தல் சம்பவங்கள் நடந்ததாகவும், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை மையமாக வைத்து, இந்த கடத்தல் சம்பவங்கள் நடந்ததாகவும், அந்த பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்துபவர், கடையில் பணியாற்றும் ஊழியர்கள், இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணி உட்பட 9 பேரை, கடந்த ஜூன் மாதம் கடைசியில், சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். 

267 கிலோ தங்கம் கடத்தல்

அந்த விசாரணையின் போது, இந்த கடத்தல் பின்னணியில் பிரமுகர் ஒருவர் முக்கியமாக செயல்பட்டதாகவும், அவருடைய சிபாரிசின் பெயர் இல்லையே இந்த பரிசு பொருட்கள் நடத்தும் கடைக்கு, இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்கியதாகவும், தெரிய வந்தது. இந்தநிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனாலும் கடத்தப்பட்ட 267 கிலோ தங்கத்தில், இன்னும் ஒரு கிலோ தங்கம் கூட கடத்தல்காரர்களிடம் இருந்து, சுங்கத்துறை மீட்கவில்லை. அதே நேரத்தில் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட  பிரமுகர் உட்பட்டோருக்கு சம்மன்கள் அனுப்பி, சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏர் இன்டெலிஜென்ட் பிரிவு 

இந்தநிலையில் டெல்லியில் உள்ள நிதி அமைச்சக உயர் மட்ட அதிகாரிகள், சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மற்றும் சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளை, டெல்லிக்கு இரண்டு முறை வரவழைத்து, முக்கிய ஆலோசனைகள் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரத்தில், ஏர் இன்டெலிஜென்ட் பிரிவினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், அவர்களின் செயல்பாடுகள் முழு தோல்வியில் முடிந்துள்ளது என்றும் கடும் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

 கூண்டோடு இடமாற்றம்

இதற்கிடையே டெல்லியில் உள்ள இந்திய நிதி அமைச்சகம் அதிரடியாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை உயர் அதிகாரிகள் 5 பேரை கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளது. சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையில் முதன்மை ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர்கள் இருவர்,ஆகிய 5  பேர்கள் அதிரடியாக இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர்.  அதுமட்டுமின்றி சென்னை சுங்கத்துறையில் உள்ள துணை ஆணையரர்கள், உதவி ஆணையர்கள் 7 பேரை அதிரடியாக, டெல்லி, மும்பை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் என்று பல்வேறு இடங்களுக்கு  இடமாற்றமும் செய்துள்ளனர். 

உண்மையான கடத்தல் கோஷ்டிகள்

இதற்கிடையே இந்த இடமாற்றங்கள் குறித்து விசாரித்த போது, இது வழக்கமாக நடக்கும் இடமாற்றங்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் இந்த இடமாற்றம் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருந்ததால், இப்போது தாமதமாக இடமாற்றங்கள் நடந்துள்ளன என்று ஒரு தரப்பிலும், மற்றொரு தரப்பில், தங்கம், போதை பொருட்கள் கடத்தல் சமீப காலமாக, சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வருகின்றன.இவைகளை கண்காணிக்க வேண்டிய ஏர் இன்டலிஜென்ட் பிரிவு, முறையாக செயல்படவில்லை.

உண்மையான கடத்தல் கோஷ்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல், சாதாரண பயணிகளை சோதனை என்ற பெயரில் பல மணி நேரம் நிறுத்தி வைத்து அலைக்களிப்பதாக கூறப்படுகின்றது. அதோடு 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 9 பேர் கைது செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாகியும்,  சம்பந்தப்பட்ட வழக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை,இந்தநிலையில் தான் இந்த இடமாற்றம் நடைபெற்று உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
25 பேருந்து நிலையங்கள்; 116 கார்பார்க்கிங்: திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!
25 பேருந்து நிலையங்கள்; 116 கார்பார்க்கிங்: திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!
School Leave: மாணவர்களே..!  ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
School Leave: மாணவர்களே..! ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
விவசாயிகள் கவனத்திற்கு... நெற்பயிரில் பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
விவசாயிகள் கவனத்திற்கு... நெற்பயிரில் பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
Embed widget