மேலும் அறிய

இறந்தும் உயிர் வாழும் இளைஞர்..7 பேருக்கு உடல் உறுப்பு தானம்..! திருமணமான 6 மாதத்தில் நடந்த சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் , மூளைச் சாவு அடைந்த நிலையில், அவருடைய உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது

செங்கல்பட்டு (Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம்  மாமல்லபுரம் அடுத்த வட கடம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி அஞ்சாலை. இவர்களுக்கு உதயகுமார், கனகலட்சுமி, மணிகண்டன் ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்களில் உதயகுமார் மற்றும் கனகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. 3 ஆவது மகனான மணிகண்டனுக்கு திருப்போரூர் அடுத்த நெம்மேலி பேரூர் கிராமத்தைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணுடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. மணிகண்டன் (28) அக்ரி டிப்ளமோ படிப்பு முடித்து விட்டு கரும்பாக்கம் கிராமத்தில் உரங்கள், வேளாண் பூச்சி மருந்துகள், விதைகள் விற்பனை செய்யும் கடையை சொந்தமாக நடத்தி வந்தார்.
 
விபத்து நடைபெற்ற இடம்
விபத்து நடைபெற்ற இடம்
 
மோட்டார் சைக்கிளும் நேருக்கு - நேர் மோதி
 
தினமும் மோட்டார் சைக்கிளில் வட கடம்பாடியில் இருந்து கரும்பாக்கத்திற்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை 20ஆம் தேதி மதியம் கடையில் இருந்து நெம்மேலி பேரூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்து, மதிய உணவு சாப்பிட்டு விட்டு தனது மோட்டார் சைக்கிளில் திருப்போரூர் வழியாக கரும்பாக்கம் கடைக்கு சென்று கொண்டிருந்தார். மடையத்தூர் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர், அடுத்த வாடாதவூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு (31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், மணிகண்டனின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
மணிகண்டன் மூளைச்சாவு
 
தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவிலம்பாக்கம் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் மணிகண்டன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டனின் தந்தை ஏகாம்பரம், தாய் அஞ்சாலை, மனைவி ஹேமலதா, சகோதரர் உதயகுமார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மணிகண்டனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
 
உடல் உறுப்புகளை தானம் செய்த மணிகண்டன்
உடல் உறுப்புகளை தானம் செய்த மணிகண்டன்
 
உடல் உறுப்புகள் 7 பேருக்கு
 
இதையடுத்து மருத்துவக்குழுவினர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவித்து உடல் உறுப்புகள் தேவை குறித்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு இதய வால்வுகள், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள், ஒரு கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகள் 7 பேருக்கு பொருத்தம் செய்ய முடிவு செய்து, அதற்கான அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். திருமணமாகி 7 மாதத்தில் விபத்தில் மரணமடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக, திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget