மேலும் அறிய
Advertisement
செங்கல்பட்டு : விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியல் இதுதான்..
செங்கல்பட்டு மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிட நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்துள்ள பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்தின் தலைமையில், தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட, 20 மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
இந்த கூட்டத்தில், விரைவில் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டுக் கொள்ளலாம் என மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகளில் சிலர், ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டு, வெற்றியும் பெற்றுள்ளனர். தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்தில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் பெரியவெளிக்காடு ஊராட்சி மன்ற 1 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுதா என்பவர் போட்டிருக்கிறார். அதேபோல கொடூர் ஊராட்சியில் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, அப்பகுதியில் கிளைத் தலைவர் சத்யா போட்டியிடுகிறார்.
பரமேஸ்வரிமங்கலம் ஊராட்சியில் ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அப்பகுதி கிளை தலைவர் பாலாஜி என்பவர் போட்டியிடுகிறார். நீலமங்கலம் ஊராட்சியில் நாலாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒன்றிய இணை செயலாளர் திருநாவுக்கரசு என்பவர் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, செங்கல்பட்டு மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட உள்ளோம். போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளோம். மக்களின் ஆதரவால் நிச்சயம் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். போட்டியிடுபவர்களின் பட்டியல் அனைத்தும் இன்று மாலை வெளியிடப்படும் எனக் கூறினார்.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion